மாநாடு திரைப்படம் ஹிட் கொடுத்து விட்டதால் அனைவருக்கும் நன்றி கூறும் மொத்த பட குழு.! வீடியோவை பகிர்ந்த சிம்பு.!

சிம்பு நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வரும் திரைப்படம் தான் மாநாடு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வெளியான இந்த திரைப்படம் மக்களின் பேராதரவை பெற்று விட்டது படம் வெளியாவதற்க்கு கடைசி நிமிடம் வரை ரசிகர்கள் பலரும் மாநாடு திரைப்படம் வெளியாகி விடுமா என குழப்பத்தில் இருந்தார்கள்.

மேலும் மாநாடு திரைப்படத்தில் சிம்புவின் நடிப்பை விட நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்களின் நடிப்பு மிகவும் மிரட்டலாக இருந்தது என பல ரசிகர்களும் கூறிவந்தார்கள்.அதனைவிட இயக்குனர் வெங்கட் பிரபு திரைப்படம் என்றால் பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான் அதேபோல் பிரேம்ஜி இந்த திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்து விட்டது.

மேலும் இந்த திரைப்படம் வசூலில் அதிகம் வசூல் செய்து வருவதாகவும் தகவல் வைரலாகி வந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.ஆம் இந்த வீடியோவை நடிகர் சிம்புதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதாவது இந்த வீடியோவில் இயக்குனர் வெங்கட்பிரபு,சிம்பு,எஸ்.ஜே சூர்யா மற்றும் மொத்த படக்குழுவும் மாநாடு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதால் மாநாடு திரைப்படத்திற்கு உதவியாக இருந்த பல பிரபலங்களுக்கும் நன்றி கூறி வரும் பொழுது எடுத்த வீடியோவை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நடிகர் சிம்பு ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளி தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment