பிரபல நடிகையை அறைக்குள் வைத்து பூட்டிய பிரபல நிறுவனத்தின் ஊழியர்கள்.! போலீசார்கள் விசாரணை..

heroyin

பிரபல நடிகை ஒருவரை கடையின் வேலை செய்யும் ஊழியர்கள் ரூமுக்குள் விட்டு பூட்டி உள்ள சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதாவது மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அன்னா ராஜன். மலையாளத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் தான் அங்கமாலி டைரி. இந்தத் திரைப்படம் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.

மேலும் இந்த திரைப்படம் பெரிதாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான நிலையில் மிகப்பெரிய ஹிட் அடித்தது பலரையும் வியப்பில் ஆழத்தியது. இவ்வாறு இந்த ஹிட் படத்தை லிஜோ ஜோஸ் என்ற இயக்குனர் இயக்கியிருந்தார் இவ்வாறு இந்த திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகை அன்னா ராஜன்.

இவர் இதற்கு முன் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது இந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற அந்த வகையில் ஐயப்பனும் கோஷியும் என்ற வெற்றி திரைப்படத்தின் தந்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

மேலும் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் அன்னா ராஜன் தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது போலீசார்களிடம் புகார் அளித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அவர் கூறியதாவது ஆலுவா காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் புதிய சிம்கார்டு வாங்க சென்ற இடத்தில் தனியார் டெலிகாம் நிறுவன ஊழியர்கள் தன்னை அறைக்குள் அடைத்து வைத்து பூட்டி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார்கள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் கேரளாவின் ஆலுவாவில் உள்ள தனியா டெலிகாம் நிறுவனத்திற்கு புதிய சிம் கார்டு தொடர்பாக விசாரிக்க சென்றுள்ளார் புது சிம் கார்டு வாங்குவதில் நடிகை அன்னா ராஜனுக்கும் அங்குள்ள ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்ற அன்னா ராஜனை அங்குள்ள ஊழியர்கள் ஒரு அறையில் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது.‌ இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

annaspeekss
annaspeekss

மேலும் இது குறித்து அன்னா ராஜன் எனக்கு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்குவதற்காக தான் அந்த டெலிகாம் நிறுவனத்திற்கு சென்றேன் நான் நடிகை என்பதை அவர்களிடத்தில் காண்பித்துக் கொள்ளவில்லை பின்னர் சிம் கார்டு தொடர்பான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது அங்குள்ள ஊழியர்கள் என்னிடம் தகராறு செய்தனர் என்னை உள்ளேயே வைத்து கதவை மூடிவிட்டனர் நான் புகார் அளித்த நிலையில் அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டனர் இதனால் வழக்கை திரும்பி பெற்றேன் என்று கூறியுள்ளார்.