தமிழ் சினிமாவில் சமீப காலமாக டாப் நடிகர்கள் படங்கள் பெரிய அளவில் மோதிக் கொள்ளாமல் சோலோவாக ரிலீஸ் ஆகின்றன ஏன் அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த கடந்த தீபாவளி அன்று சோலோவாக ரிலீஸ் ஆகியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் வலிமை திரைப்படம் கூட அடுத்த வருடம் பொங்கலுக்கு சோலோவாக ரிலீஸ் ஆகிறது.
இப்படி டாப் நடிகர்கள் படங்கள் சோலோவாக ரிலீஸ் ஆகி வருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முதலில் பொங்கலன்று வெளியாக இருந்தது பின்னர் அதில் இருந்து பின்வாங்கி.
ஒரு வழியாக பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாகும் என உறுதியாக சொல்லி உள்ளது. இதனை அடுத்து படக்குழு மும்முரமாக வேலை செய்து வருகிறது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது. எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடன் கை கோர்க்க அருள்மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தனியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு போட்டியாக அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள யானை திரைப்படம்.
அதே நாளில் வெளியாகி மோத இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யாவின் படத்துடன் ஒரு தடவை நேருக்கு நேர் மோதி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இயக்குனர் ஹரி இருப்பதாக தெரிய வருகிறது.