பழசை சொல்லி நெல்சனை உசிப்பிவிடும் ரஜினிகாந்த் – தரமாக ரெடியாகும் ஜெயிலர் படத்தின் கதை.!

rajini
rajini

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் தற்பொழுது கூட அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடிக்க ரெடியாகி உள்ளார்.

இந்த படம் மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக இருக்க வேண்டுமென ரஜினி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் கதைக்கு ஏற்றபடி சிறந்த நடிகர்களை தேர்வு செய்து  வருகிறார் நெல்சன். அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்.

மற்றும் பிரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயன் என ஒவ்வொரு நடிகரையும் பார்த்து பார்த்து செலக்ட் செய்கின்றனராம். படத்தின் ஷூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது அதற்கு முன்பாக நெல்சன் ரஜினியும் தொடர்ந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த படம் நிச்சயம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என ரஜினி அதிகம் ஆர்வம் காட்டி உள்ளார்.

ஏனென்றால் அண்மை காலமாக ரஜினி படங்கள் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தினாலும் பெரிய அளவில் பேசப்படவில்லை அதனால் ரஜினி நெல்சனை அழைத்து தற்போது சொல்லி உள்ளது என்னவென்றால் பாஷா, படையப்பா போன்ற அதிரி புதிரி ஹிட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு மேஜிக்கை ஏற்படுத்தியது.

அது போலவே தான் தற்போது இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு ஜெயிலர் படம் ஒரு பெரிய ஒரு மேஜிக்கை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளாராம். நெல்சன் தோல்வியிலிருந்து வெளிவர ஒரு சூப்பரான கதையை ரெடி செய்து செதுக்கி உள்ளார் என கூறப்படுகிறது நிச்சயம் ரஜினி நெல்சன் காம்போ மிகப்பெரிய ஒரு வெற்றி காம்போவாக மாறும் என சொல்லப்படுகிறது.