அஜித்தை வைத்து 20 வருடங்களுக்கு முன்பே பட எடுக்க ஆசைப்பட்ட இயக்குனர்.! கூட இருந்தவர்கள் குழி பறித்தால்..கனவோடு கனவாக மாறியதாம்.

0

திரை உலகில் எடுத்த உடனேயே ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படத்தை எடுக்க எந்த இயக்குனரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள் ஆனால் ஒரு சில இயக்குனர்கள் கதைக்களத்தை நம்பி தன்னால் முடியும் என சாதித்துக் காட்டுவார்கள்.

இயக்குனர் ஷங்கர் போலவே இயக்குனர் பிரவீன் காந்தியும் எடுத்து அசத்தினார். மேலும் இவர் தமிழ் திரை உலகில் பல்வேறு விதமான படங்கள் கொடுத்து நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் ரட்சகன் மற்றும் ஜோடி போன்ற இரண்டு திரைப்படங்களை இயக்கியதை தவிர வேறு எந்த திரைப்படமும் இயக்காமல் சினிமா உலகில் தற்போதுவரையிலும் இருந்து வருகிறார்.

சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அஜித்தை வைத்து ஒரு சிறந்த படத்தை எடுத்துக் கொடுக்க வேண்டுமென ஆசைப்பட்டார் அந்த வகையில் அஜித்தும் அவரது படத்திற்கு ஓகே சொன்னார் ஓகே சொல்லி ஓரிரு நாட்கள் ஓடின திடீரென அவருடன் பணியாற்றியவர்கள் அவரைப்பற்றி தவறாக அஜித்திடம் சொன்னதால் பின் படத்தை இது உடனடியாக அந்த திரைப்படத்தை ட்ராப் செய்து விட்டு பிரவீன் காந்தியின் அசிஸ்டெண்ட் ஆக இருந்த ஏஆர் முருகதாசுக்கு அடுத்த பட வாய்ப்பைக் கொடுத்தார்.

அஜித்தை வைத்து ஏ ஆர் முருகதாஸ் தீனா என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தார். பிரவீன் காந்தியும் ஏன் படத்தை ட்ராப் செய்துவிட்டு இந்தப் படத்தில் நடிக்கிறார்கள் என கேட்கவில்லையாம் அதற்கு எனது அசிஸ்டெ ன்ட் நன்றாக இருந்தால் தனக்கு நல்லது தானே என்று கூறி அதை கேட்காமலேயே விட்டுவிட்டாராம்.

சினிமா ஆரம்பகட்டத்தில் அஜித் பல்வேறு தொடர் தோல்விகளையும் வெற்றிகளையும் கொடுத்து வந்தவர் என்பது நாம் அறிந்தது ஆனால் அவரது ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்ததால் பல இயக்குனர்களும் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டார்கள்.

ஏனென்றால் அஜித் ரசிகர்களே படத்தை வெற்றிப் படமாக மாற்றி விடுவார்கள் என்று எண்ணியுள்ளனர் அதன் விளைவாகவே பிரவீன் காந்தியும் அஜித்தை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டார் அது தற்போது மண்ணோடு மண்ணாக மாறியதால் அதன்பிறகு எந்த ஒரு படத்தையும் அஜித்தை வைத்து எடுக்க முடியாமல் போனது.