வலிமை படத்தின் ஷூட்டிங் பார்ட்டில் அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து குறித்து முதல் முறையாக பேசிய இயக்குனர்.! எங்க அந்த விபத்து நடந்தது தெரியுமா.?

நடிகர் அஜித் தற்போது ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து “வலிமை” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தாலும் ஒரு வழியாக நிறைவடைந்து. வலிமை படம் வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.

மேலும் வலிமை படக்குழுவும் போஸ்ட் புரமோஷன் வேலைவாய்ப்புக்கு தற்போது தயாராகி கொண்டிருக்கிறது இந்த நிலையில் பிரபல பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் இயக்குனர் ஹச். வினோத். அந்த வகையில் சமீபத்தில் இந்த படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார்.

ஹைதராபாத்தில் நாங்கள்  மிகப்பெரிய நெடுஞ்சாலையில் படத்தின் ஷூட்டிங்கை எடுத்துக் கொண்டிருந்தோம் அப்போது அஜித் விதமாக கல் சறுக்கி  கீழே விழுந்து விட்டார். நாங்கள் தொலைவில் படத்தின் ஷூட்டிங்கை எடுத்துக் கொண்டிருந்தோம் இவர் விழுந்ததை அடுத்து நாங்கள் அங்கு வேகமாக பதறி அடித்துக் கொண்டு ஓடினோம்.

ஆனால் அஜித் சாரோ எழுந்து பைக்கை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது என்ன சார் ஆச்சு என்று கேட்கவும் அப்பொழுது அவர் வண்டி உடைந்தது தான் ரொம்ப கவலையா இருக்கு நாளைக்கு எதை வச்சு  பண்றதுன்னு தெரியல என கூறினார். பரவாயில்ல சார் விடுங்கள் என்று கூறி விட்டோம்.

அதன்பிறகு தான் அவரது கை கிளவுஸ் போன்றவற்றை கழட்டும் போது தான் தெரிந்தது சதைகள் கிழிந்து இரத்தம் ஊற்றியது. அஜித் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வண்டி உடைந்த கவலை தான் அவருக்கு பெரிதாக இருந்தது எனக் கூறினார்.

Leave a Comment