தனுஷுக்கு ஜோடியாக 17 வயது இளம் நடிகையாக பார்த்து தட்டி தூக்கிய இயக்குனர்.!

தமிழ் திரையுலகில் தற்போது ஒரு நடிகரைப் பற்றி தான் பல சினிமா பிரபலங்கள் சமூக வலைதள பக்கங்களில் புகழ்ந்து வருகிறார்கள் யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தனுஷ் தான் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் கர்ணன்.

மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த தனுஷ் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் நாளுக்கு நாள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பற்றி தினமும் ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

மேலும் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் தனுஷ் கூடிய சீக்கிரத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இன்னொரு தகவலும் இணையதளத்தில் தனுஷை பற்றி வைரலாகி வருகிறது ஆம் அந்த தகவல் என்னவென்றால் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி அவரை பாலாஜி மோகன் தேர்வு செய்துள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் இவருக்கு வெறும் 17 வயது தான் ஆகிறதாம் இவர் தெலுங்கில் உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் நடித்து தற்போது பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறாராம்.

keerthi

மேலும் இந்த தகவலை அறிந்த தனுஷ் ரசிகர்கள் பலரும் என்னம்மா இயக்குனர் ஜோடி போடுகிறார் வேற லெவல் தான் என்று கூறிவருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version