அஜித்துக்கு எழுதிய கதையை பிரசாந்துக்கு கொடுத்த இயக்குனர்.! எல்லாம் இவுங்க பாத்த வேலையே காரணம்.! இப்ப புலம்பும் இயக்குனர்.

0

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் அஜித்குமார். தற்போது பல இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு பட வாய்ப்பை அள்ளி கொடுப்பதால் அந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுக்க இளம் இயக்குனர்களும் சீன் பை சீனாக படத்தை செதுக்கி நல்லதொரு படத்தை கொடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அதனால் அந்த திரைப் படங்களும் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துகிறது, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெறுகிறது. இதனால் இனி வருகின்ற காலகட்டங்களில் அவர் இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு பல  அள்ளி கொடுப்பார் என கூறப்படுகிறது.இப்பொழுதுதான் அப்படி என்றால் கிடையாது ஆரம்பத்திலும் பல இளம் இயக்குனர்களுக்கு பல பட வாய்ப்புகளை கொடுத்தவர் அஜீத் என்பது நாம் மறந்து விடக் கூடாது

மேலும் திறமைவாய்ந்த முன்னணி இயக்குனர்களுக்கும் பட வாய்ப்பை அள்ளி கொடுத்து இருக்கிறார்.ஆரம்ப காலகட்டத்தில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து வந்த போது அஜித்தை வைத்து பல படங்களை இயக்க வேண்டும் என இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர் அந்த வகையில் பிரவீன்காந்தி “ஸ்டார்” என்ற திரைப்படத்தின் கதையை அஜீத்துக்காக தான் முதன் முதலில் எழுதினார்.

ஆரம்பத்தில்  இந்த படம் மூன்று நாட்கள் சூட்டிங் எடுக்கப்பட்டிருந்தாலும் இடையில் அவருடன் பணியாற்றியவர்கள் இவரைப்பற்றி தப்பு தப்பாக சொல்ல உடனே அஜீத் அந்தப் படத்தில் இருந்து விலகினார் பின் ஸ்டார் படத்தின் கதையை பிரசாந்துக்கு கொடுத்தார் இயக்குனர் பிரவீன் காந்தி.

பிரவீன் காந்தி விட்டுவிட்டு அஜித்  அவரது அசிஸ்டெண்ட் ஆக இருந்த முருகதாசுக்கு  பட வாய்ப்பை கொடுத்தார்  அந்த படமே தீனா படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.பிரவீன் காந்தியும் ஏன் எனது படத்தையும் உதறிவிட்டு இவர்கள் என்று அஜித்திடம்  கேட்காமல் விட்டுவிட்டாராம்.

அஜித்தை வைத்து இதுவரை படம் எடுக்காமல் போனதால் ரொம்பவும் நொந்து போனாராம் பிரவீன்காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.