ஜோதிகாவுக்கு கதை சொல்ல முடியாமல் தவித்த இயக்குனர்.? கடைசியா யாருகிட்ட சொன்னாரு தெரியுமா.? பாவம் அந்த மனுஷன்.

0
jothika
jothika

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி ஆகி அஜித் விஜய் சூர்யா போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக மாறியவர் நடிகை ஜோதிகா ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யா மீது காதல் வயப்பட்டு பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு ஜோதிகா சிறு காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து வலுவான கதாபாத்திரங்களில் நடித்தார் அது அவருக்கு வெற்றியை பெற்றுத்  அதைத்தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களிலும் முக்கிய நடிகர்களின் படங்களிலும், சோலோ கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

தற்போது கூட சசிகுமாருடன் இணைந்து இவர் உடன்பிறப்பே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதை தொடர்ந்து இவர் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் தற்போது கமிட்டாகி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகை ஜோதிகா ஓரிரு இயக்குனர்களிடம் கதை கேட்டு ஒப்பந்தமாக ரெடியாக இருக்கிறார் இந்த நிலையில் ஜோதிகாவுக்கு கதை செல்ல முயற்சித்தும் இன்று வரை நடக்காமல் அவரது வீடு மற்றும் அவரது செல்லுமிடமெல்லாம் சுற்றித்திரிந்து வருகிறார்.

இயக்குனர் தினேஷ் செல்வராஜ். பலமுறை ஜோதிகாவை பார்க்க நேரடியாக  கதை கூற முடியவில்லை ஏனென்றால் ஜோதிகா தற்போது தெலுங்கு படத்தில் நடிப்பதால் அவர் அதை முடித்துவிட்டு தான் தமிழ் சினிமா பக்கம் திரும்பு வாராம். ஜோதிகா வந்த பிறகுதான்  படத்தின் கதையை சொல்ல முடியும் என ஜோதிகா நண்பர்கள் கூறி உள்ளனர் தினேஷ் செல்வராஜூ ஜோதிகாவின் நண்பர்களுக்கு படத்தின் கதை மற்றும் ஜோதிகாவின் கதாபாத்திரத்திற்காக கதையையும் கூறியுள்ளார்.

கண்டிப்பாக சிறப்பாக இருக்கு நிச்சயம் அவர் நேரில் வந்த பிறகு நாங்கள் சொல்லுகிறோம் நீங்களும் ஒருநாள் வந்து சந்தித்து கதை சொல்லுங்கள் என அவர்கள் சொல்லி வழி அனுப்பி வைத்துள்ளனர். தினேஷ் செல்வராஜ் தற்போது ஜோதிகாவுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார் அவரிடம் கதை சொல்லி நிச்சயம் படத்தை எடுப்பேன் என்பது அவரது குறிக்கோளாக இருக்கிறது.