உதையநிதியால் ஏகே 62 படத்தை கைப்பற்றிய இயக்குனர்.! அப்போ விக்னேஷ் சிவன் நிலைமை?

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத்துடன் மூன்றாவது முறை இணைந்து துனிவு திரைப்படத்தில் நடித்து உள்ளார் நடிகர் அஜித். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி வசூலிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருந்தார் நடிகர் அஜித். ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏகே 62 திரைப்படத்திலிருந்து நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆரம்பத்தில் ஒரு ஒன்லைன் கதையை அஜித்திடம் கூறியிருக்கிறார் ஆனால் இந்த கதையில் சில மாற்றங்கள் வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனமும் அஜித் குமாரும் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எட்டு மாதம் அவகாசம் இருந்தும் கதையில் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லையாம் இயக்குனர் விக்னே சிவன்.

இதனால தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏகே 62 திரைப்படத்திலிருந்து நீக்க காரணமாக இருந்தது என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற சலசலப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது இந்த நிலையில் தற்போது ஒரு தகவலால் ரசிகர்கள் ஏகே 62 திரைப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

அதாவது ஏகே 62 திரைப்படத்தை தற்போது மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் தடம், தடையறத் தாக்க, போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தை இயக்க உதயநிதி ஸ்டாலின் தான் உதவி செய்துள்ளார் என்று தற்போது ஒரு தகவல் இருக்கிறது அதாவது உதயநிதியை வைத்து மகிழ் திருமேனி கலகத்தலைவன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் அந்த சமயத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் பொறுப்பாளர் செண்பகமூர்த்தி இடம் நல்ல பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் செண்பகமூர்த்தி லைக்காவிடம் மகிழ் திருமேனியை சிபாரிசு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது அது மட்டுமல்லாமல் அஜித் இடமும் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று மகிழ் திருமேனி அஜித்திடம் சென்று கதையை கூறவே அஜித்திற்கு கதை மிகவும் பிடித்து விட்டதாம்.

விரைவில் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது ஆனால் இந்த தகவல் எல்லாம் உண்மையா இல்லை வதந்தியா என்று தெரியவில்லை விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தால் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment