உனக்கெல்லாம் 25000 ரூபாய் சம்பளமா.? வடிவேலுவை ஓட ஓட துரத்திய இயக்குனர்.! யார் என்று தெரியுமா.?

அரண்மனைக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் வடிவேலு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்த கவுண்டமணி செந்திலுக்கு பிறகு  காமெடி நடிகராகதிகழ்ந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த வடிவேலு பின்பு தன்னுடைய விடாமுயற்சியாலும் திறமையாளும் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

பொதுவாக மற்றவர்களை நக்கல் அடித்து காமெடி செய்து வந்த ஃபார்முலாவை ஒரேடியாக மாற்றியவர் வடிவேல் தான். ஏனென்றால் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு வடிவேலு செய்யும் காமெடிகள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவர் நகைச்சுவை நடிகராக வலம் வந்ததில் வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது, குணச்சித்திர வேடம் என பல்வேறு கோணங்களில் நடித்து வந்தார்.

எந்த அளவு தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் சிரிக்க வைப்பாரோ அந்த அளவு குணசத்திரவேடத்தில் கண்கலங்கவும் வைத்துவிடுவார். வடிவேலின் சாம்ராஜ்யம் 90களில் தொடங்கியது. தனது உடல் மொழியாலும் தன்னைத்தானே மட்டம் தட்டிக் கொண்டு காமெடியாக நடிப்பதாலும் மக்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்தார். வடிவேலு சந்திரமுகி திரைப்படம் ஆரம்பிக்கும் பொழுது வடிவேலுவின் கால்ஷீட் வாங்கி விடுங்கள் என ரஜினியே கூறும் அளவிற்கு மிகவும் பிசியாக இருந்தார்.

இவர்கள் கூட்டணியில் உருவான இந்த காமெடி மிகப்பெரிய ஹிட் அடித்தது இப்படி உயர்ந்து கொண்டிருந்த வடிவேலு அரசியலில் குதிக்கிறேன் என மேடை ஏறி தன் சினிமா காரியரை தொலைத்துக் கொண்டார். பின்பு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார் இந்த பிரச்சனைகளும் பஞ்சாயத்துகளும் ஓய்ந்த பிறகு தற்பொழுது மீண்டும் சினிமாவில் கால் தடம் பதித்து வருகிறார். தற்பொழுது இவர் மாமன்னன் என்ற திரைப்படத்தில்  நடித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ஹீரோவாக நாய் சேகர் திரைப்படத்தில் நடித்திருந்தார்  இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் தற்பொழுது சந்திரமுகி இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தனுஷ் மாரி செல்வராஜ் இணையும்   புதிய திரைப்படத்திலும் வடிவேல் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தற்பொழுது ஒரு மணி நேரத்திற்கு லட்ச ரூபாய் சம்பளமாக வடிவேலு வாங்குவதாகவும் கிட்ட தட்ட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் எனவும்  தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் இவர் ஆரம்ப காலத்தில் ஆயிர கணக்கில் தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் சில ஆயிரம் சம்பளம் ஏற்றி கேட்டதற்காக இயக்குனர் கடும் கோபப்பட்டு திட்டியுள்ளது தற்பொழுது வைரலாகி வருகிறது. பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் கிழக்குச் சீமையிலே இந்த திரைப்படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது கலைப்புலி எஸ் தானு தயாரித்திருந்தார்.

நெப்போலியன், விஜயகுமார், ராதிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தில் வடிவேலு சோலவாக காமெடியில் கலக்கியிருந்தார் இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் பாரதிராஜாவிடம் சென்று வடிவேலு தனக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுங்கள் என கேட்டாராம்.

அதற்கு கோபப்பட்ட பாரதிராஜா நீ இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் முதல்ல நடையை கட்டு என சொல்லி விட்டாராம் உடனே வடிவேலும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இந்த விஷயம் படத்தின் தயாரிப்பாளர் எஸ் தனுவுக்கு தெரிய வந்தது உடனடியாக வடிவேலுவை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுத்து அனுப்பியுள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் படத்தின் தயாரிப்பாளர் எஸ் தானு ஏன் பா சம்பளம் விஷயம் எல்லாம் என்கிட்ட நீ கேட்க வேண்டியதுதானே ஏன் அவர்கிட்ட போய் ஏன் கேட்ட எனவும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தாராம் இந்த தகவலை எஸ் தாணு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் வடிவேலுக்கு இந்த நிலைமையா என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

Leave a Comment

Exit mobile version