உதவி கேட்டு போன இயக்குனர்.. அஞ்சு, பத்தோண்ணு கொடுக்காமல் பல லட்சம் காசை அள்ளிகொடுத்து ஆச்சரியப்பட வைத்த தளபதி விஜய்.. அப்பவே அப்படி

vijay-vikraman
vijay-vikraman

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய். நடிப்பையும் தாண்டி பலருக்கும் பல உதவிகளை செய்து இருக்கிறார் அப்படி ஒருவருக்கு பல லட்சம் ரூபாய் காசை அள்ளி கொடுத்திருக்கிறார் விஜய் அது குறித்துதான் நாம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்..

தளபதி விஜய் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் சர்வதேச போதை பொருளை மையமாக வைத்து படம் நகரும் என சொல்லப்படுகிறது இதனால் லியோ படத்தில் ஆக்ஷன்க்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது படத்தில் விஜயுடன் கைகோர்த்து அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக    போய்க் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் போதே   படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் விஜய் பற்றிய  பழைய மற்றும் புதிய செய்திகள் சமூக வலைதள பக்கங்களில் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது அப்படி அண்மையில் இயக்குனர் விக்ரமன் பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது..

விஜய் வைத்து பூவே உனக்காக படத்தை எடுத்தேன் அதன் பிறகு விஜயை வைத்து உன்னை நினைத்து என்னும் படத்தை எடுத்தேன் ஆனால்  சில காரணங்களால் விஜய் பாதிலையே விலகி விட்டார் என கூறினார் அதன் பிறகு தொடர்ந்து பேசிய விக்ரமன் விஜயின் பல்வேறு படங்களில் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் இறந்து விட்டாராம்.

இதனை எடுத்து இயக்குனர் விக்ரமன் அந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்யும் பொருட்டு பல நடிகர், நடிகைகளிடம் உதவி கேட்டாராம் அப்படி விஜய்யிடம் கேட்டவுடனேயே 2 லட்சம் பணத்தை தூக்கி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இயக்குனர் அசோசியேஷனுக்கு  25 லட்சம் பண உதவியையும் செய்தாராம் இதனை அந்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.