கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து மீண்டும் சீரியல் மூலம் ஒன்று சேரும் தீபக் சுருதி ஜோடி.! எந்த சீரியலில் தெரியுமா.?

தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் ஒருசில நடிகர் மற்றும் நடிகைகள் இணைந்து நடிக்கும் பொழுது அவர்களை வெகுவாக கவர்ந்து விடுவார்கள். அதுமட்டுமில்லாமல் நிஜ கணவன் மனைவி போல் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார்கள்.

இந்த நிலையில் பிரபல நடிகரும் தொகுப்பாளரான தீபக்1999 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த ஜென்மம் எக்ஸ் என்ற திகில் தொடரில் நடித்து இருந்தார். அந்த சீரியலுக்கு பிறகு சன் தொலைக்காட்சி ஜெயா டிவி, ராஜ் டிவி என பல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்து வந்த பல சீரியல் வெற்றி வாகை சூடியது. அதிலும் இவர் சன் தொலைக்காட்சியில் தென்றல் என்ற சீரியலில் ஸ்ருதி அவர்களுடன் இணைந்து நடித்தது ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைய வைத்தது. 2009 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் 6 வருடங்களை கடந்து  1340 எபிசோடுகளை கடந்து.

sruthi raj
sruthi raj

இந்த சீரியலை தொடர்ந்து அன்னைக்கு கீதாஞ்சலி, மனைவி செல்வி பந்தம், அரசி திருமதி செல்வம், ரோஜாக்கூட்டம் என இதுவரை 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார் தீபக்.  தன்னுடைய நடிப்பின் மூலம் சில விருதுகளையும் வாங்கியுள்ளார்.

இந்தநிலையில் தீபக் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தார். இந்த நிலையில் நீண்ட காலம் சீரியல் நடிக்காமல் இருந்த இவர் 11 வருடங்கள் கழித்து சீரியல் மூலம் களமிறங்கியிருக்கிறார்.

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரின் மூலம் தீபக் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடன் இணைந்து ஸ்ருதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை விரைவில் வெளியாக இருக்கின்றன.

தீபக் மற்றும் சுருதி இருவரும் இணைந்து தென்றல் சீரியலில் நடித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதேபோல் இந்த சீரியலில் இருவரும் இணைந்து நடிப்பார்களா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

sruthi raj
sruthi raj

Leave a Comment