சிஎஸ்கே வீரர் குடுகுடுவென ஓடி வந்து பஞ்சாப் அணி வீரர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.! அப்படி என்ன பண்ணிட்டான் இவன்.

0

இந்தியாவில் தற்பொழுது ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது தற்போது 14வது சீசன் வெற்றிகரமாக தொடங்கியுள்ளதால் ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும் விதமாகவே இருக்கிறது.

அந்த வகையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. அதற்கு காரணம் தீபக் சஹர் தான். கடந்த இரண்டு வருடங்களாக பார்மில் இல்லாத தீபக் சஹர்.

இந்த போட்டியில் தனது சரியான இடத்தில் பந்துவீசி தனது பழைய ஃபார்முக்கு வந்தார் இந்த போட்டியில் அதிரடி ஆட்டக்காரர்கள் நிறைந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை முதல் ஓவரிலேயே தடுமாற செய்ததோடு வெறும் 4 ஓவரில் 13 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களை தட்டி தூக்கியதால் அந்த அணி மிகப் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் திணறியது.

மொத்தத்தில் அந்த அணி 20 ஓவரில் 106 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது இதற்கு முக்கிய காரணம் தீபக் சஹரின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் இன் ஸ்விங், அவுட் ஸ்விங்  பால் ஆனதால் எதிரணியினர் நிலைகுலைந்து போனது தான் என கூறப்படுகிறது.

பிறகு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பொறுப்புடன் விளையாடி வெற்றியை ருசித்தது. போட்டி முடிந்த பிறகு தீபக் சஹர்  பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் பௌலரான சமியின் காலில் விழுந்து வணங்கினார்.

அதற்கு காரணம் தீபக் சஹர் எப்படி பந்து வீச வேண்டுமென அறிவுரை சமீபத்தில் வழங்கி உள்ளது தான் என்று கூறப்படுகிறது. தீபக் சஹருக்கு குரு சமி என்பது கூறிப்பிடதக்கது.