கடைசி நாளில் சிம்புக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு.. என்ன செய்துள்ளார்கள் பாருங்கள்..

0

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் நடிகர் சிம்பு.இவர் வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானார்.இதன் காரணமாக எளிதில் சினிமாவில் பிரபலமடைந்தார் அதன் பிறகு காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவ்வாறு சினிமாவில் தொடர்ந்து தனது இளம் வயதில் இருந்தே நடித்து வந்ததால் இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வந்தது.இதன் காரணமாக சிம்பு ஒரு கட்டத்திற்கு மேல் சொல்லும் நேரத்திற்கு திரைப்படங்களில் நடித்து தராமல் இருந்து வந்ததால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து படம் தயாரிப்பதற்கு தயங்கி வந்தார்கள்.

இதன் காரணமாக எந்த திரைப்படங்களிலும்  இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.அதோடு பல சர்ச்சைகளிலும் மாட்டிக்கொண்டார். பிறகு சில வருடங்கள் கழித்து சமீபகாலமாகதான் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக ஈஸ்வரன் திரைப்படம் வெளிவந்தது இதனைத் தொடர்ந்து மாநாடு திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து எஸ்கே. சந்திரசேகர், கருணாகரன், பிரேம் ஜி,எஸ்கே.சூர்யா, டேனியல் பாபு,மனோஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தினை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இதன் காரணமாக மாநாடு படக்குழுவினர்கள் சிம்புவுடன் இணைந்து  கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள் அதோடு வெங்கட் பிரபு நடிகர் சிம்புவிற்கு வாட்ச் ஒன்றை ஹிட்டாக வழங்கியுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SIMBU 1
SIMBU 1