“டாக்டர்” படத்தில் இடம்பெற்று உள்ள ஒரு பாடலுக்கு மட்டும் கோடிகணக்கில் செலவு செய்த படக்குழு.! அதிர்ச்சியான வெள்ளித்திரை.

0

தமிழ் சினிமாவில் சமீப காலமாக டாப் நடிகர்கள் பலரும் ஆக்ஷன் கலந்த படங்களையே விரும்புகின்றனர் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் தான் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் காமெடி மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார்.

இவரது திரைப்படங்களுக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் மற்றும் ரசிகர்கள் வருவதால் இவரது படங்கள் நல்லதொரு வசூல் வேட்டையும் நடத்துகின்றன அதனாலேயே தற்போது சம்பளத்தை உயர்த்தி வெற்றிநடை கொண்டு வருகிறார் மேலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்டில் சிவகார்த்திகேயனும் இருக்கிறார்.

இவர் நடிப்பில் பல்வேறு விதமான திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன அந்தவகையில் டான், அயாலன், டாக்டர் போன்ற அடுத்தடுத்து வெளிவர உள்ளது. அதிலும் குறிப்பாக டாக்டர் திரைப்படம் தற்போது வெளியாக ரெடியாக இருக்கிறது அந்த வகையில் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கின்றன.

சமீபத்தில் கூட இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் youtube -ல் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது டாக்டர் படத்தில் இடம் பெற்றுள்ள “செல்லம்மா” பாடலை எடுக்க மட்டுமே தயாரிப்பாளர் ஒரு கோடி செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக திரையரங்கில் படம் பார்க்கும் பொழுது “செல்லம்மா” பாடல் சிறந்த விஷவல் ட்ரீட்டாக அமையும் என்று கூறுகின்றனர்.