விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் பாடலை வெளியிட்ட படக்குழு.!

மக்களால் என்றும் அன்போடு அழைக்கப்படுபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இவர் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை,சேதுபதி,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்,96 போன்ற பல்வேறு திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனையடுத்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் நடித்து வரும் இந்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் மேலும் விஜய் சேதுபதி சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் மாமனிதன்.

சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள இது நான்காவது திரைப்படம் என்று கூட கூறலாம் இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசை அமைத்து உள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகிய மாமனிதன் திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு முடிவடைந்துவிட்டது இந்நிலையில் இந்த படம் ஒரு சில காரணங்கள் குறித்து அப்போதே தள்ளிவைக்கப்பட்டது இதனையடுத்து இந்த திரைப்படத்திற்கான காண முதல் பாடலை படக்குழுவினர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் இந்த பாடலை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதி மாமனிதர் திரைப்படம் கூடிய சீக்கிரம்  வெளியானால் நல்லா இருக்கும் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment