கவர்ச்சி புயல் யாஷிகா ஆனந்தை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்.! விளக்கம் இதோ..

yashika-anand
yashika-anand

நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்த் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இதன் மூலம் ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் பிரபலமானார்.

மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட பல திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் படித்தொட்டி எங்கும் பிரபலமாக நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்படி திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கூட மறுபுறம் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா ஆனந்த் தன்னுடைய நண்பர்களுடன் காரில் பயணம் செய்த பொழுது மாமல்லபுரம் அருகே உள்ள சூளைக்காடு பகுதியில் கார் கவர்ந்து விபத்துக்குள்ளானது அதில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர் அந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த பொழுது திடீரென கார் கட்டுப்பாடை இழந்ததால் விபத்துக்கு உள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட் பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மிகவும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் எந்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று முன்தினம் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் இவர் ஆஜராகாததால் வரும் 25ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என கைது வாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.