பிக்பாஸ் டைட்டிலை வென்ற போட்டியாளர்.? வாக்குகள் நிலவரம் இதோ

சின்னத்திரையில் பாப்புலரான தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான் இதில் பல்வேறு வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன அதில் ஒன்று பிக்பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் 6 – வது சீசனும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 21 போட்டியாளர்கள் அனைவருமே குறைந்த ஓட்டுக்களை வாங்கி வெளியேறிய நிலையில் கடைசி மூன்று இடத்தை அஸிம், விக்ரமன் மற்றும் ஷிவின் பிடித்தனர். மூவருமே பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாண்டவர்கள் என்பதால் யார் 50 லட்சம் பணம் மற்றும் டைட்டில் பட்டதை வெல்வார் என்பது கணிக்க முடியாமல் இருந்தது.

ஆனால் இன்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் வாக்குகளின் நிலவரங்கள் வெளிவந்துள்ளன. ஷிவின் 28.09 கோடி வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் பலரும் இவர்தான் டைட்டில் வின்னர் என எதிர்பார்த்தனர். ஆனால் இந்த இடத்தை பிடித்திருக்கிறார் அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் விக்ரமன் பிடித்துயுள்ளார். இவர் மொத்தம் 35.98 கோடி வாக்குகள் குவித்திருக்கிறார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் சிறப்பாக விளையாடவர் என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு இந்த இடம் கிடைத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது முதல் இடத்தை அஸிம் கைப்பற்றி இருக்கிறார் இவர் 36.02 கோடி வாக்குகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார் முதல் இடத்திற்கும் இரண்டாவது இடத்திற்கும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்குகள் தான் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தை பிடித்த அஸிம்  50 லட்சம் பணம் மற்றும் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை அவர் தான் பெற இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment