வேட்டையாடு விளையாடு கமலை போல் ராயல் என்ஃபீல்டில் வளம் வரும் தளபதி பட நடிகை.!

தமிழ் சினிமா உலகில் அதிகம் ரசிகர்கள் வட்டத்தை சேர்த்து வைத்திருப்பவர் தான் தளபதி விஜய் இவரது நடிப்பில் தனது 65ஆவது திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து படபிடிப்பு தளம் புகைப்படம் ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

இந்த திரைப்படத்திற்கு முன்பு இளைய தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 1000ம் திரையரங்குகளில் குறையாமல் வெளியாகி சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் அந்த திரைப்படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருப்பார் அதுமட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களில் சஞ்சீவ், ஆண்ட்ரியா,மகேந்திரன் போன்ற ஒரு சினிமா பட்டாளமே நடித்திருப்பார்கள்.

மாளவிகா மோகனன் அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.அதுமட்டுமல்லாமல் பாலிவுட் திரைப்படத்தில் ஒன்றிலும் மாளவிகா மோகனன் பிஸியாக நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.-

malavika mohanan

மாளவிகா மோகனன் திரைப்படங்களில் படு பிசியாக நடித்து வந்தாலும் அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு சமீபகாலமாகவே விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில்  இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

malavika mohanan

ஆம் அந்த புகைப்படத்தில் இளைஞர்கள் ஆர்வமாக ஓட்டிவரும் ராயல் என்ஃபீல்டை கெத்தாக ஓட்டி வரும் பொழுது எடுத்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் புல்லட்டுக்கு கெத்தாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version