நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும் “நானே வருவேன்” படத்தின் வசூல் – இதுவரை அள்ளிய மொத்த கலெக்ஷன் இவ்வளவு தானாம்.?

இயக்குனர் செல்வராகவன் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்  தனுசுடன் கைகோர்த்து பணியாற்றிய திரைப்படம் தான் நானே வருவேன்.  இந்த படம் முழுக்க முழுக்க அப்பா – மகள் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு படமாக உருவாகி இருந்தது.

நானே வருவேன் படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து செல்வராகவன், யோகி பாபு, இந்துஜா ரவிச்சந்திரன், பிரபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருக்கின்றனர் குறிப்பாக தனுஷ்  இரட்டை கதாபாத்திரத்தில் நடித்தார் இரண்டு கதாபாத்திரமே..

சூப்பராக இருந்ததால் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் காரணமாக எதிர்பார்த்த வசூல் முதல் நாளில் அள்ளியது ஆனால் இரண்டாவது நாளிலிருந்து நானே வருவேன் படத்திற்கு வசூல் குறைந்துள்ளது . காரணம்  நானே வருவேன் படத்தை தொடர்ந்து அடுத்த நாளில் பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆனது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் அனைவருக்கும் பிடித்த படமாக தற்பொழுது இருப்பதால் அந்த படத்தை பார்க்கவே மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் காரணமாக நானே வருவேன் படத்தின் வசூல் குறைந்து உள்ளதாம் இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை நானே வருவேன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

40 கோடி பட்ஜெட்டில் உருவான அனைவரும் படம் 4 நாட்கள் முடிவில் 20 கோடி மட்டுமே உலகம் முழுவதும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் நடிகர் தனுஷின் நானே வருவேன் படத்தின் வசூல் குறைய தான் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

Leave a Comment