முடிவுக்கு வந்தது” கோப்ரா” படத்தின் வசூல்.? மொத்தமே இத்தனை கோடிகள் தானாம்.?

cobra
cobra

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகனாக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் தனது ஒவ்வொரு படத்திற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் அதை ஒவ்வொரு படங்களிலும் நாம் பார்த்து வருகிறோம். இருப்பினும் இவர் தேர்வு செய்யும் ஒரு சில கதைகளம் சரி இல்லாத காரணத்தினால்..

சில படங்கள் தோல்வி படங்களாக அவருக்கு அமைந்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக அண்மை காலமாக அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டாலும் சொல்லு கொள்ளும்படி வசூலை அல்லாமல் இருந்து வருகின்றன. அதை கோப்ரா படம்  முறையடிக்கும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த படத்தில் விக்ரம் ஒன்பது விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என எல்லாம் சொல்லப்பட்டது. தொடர்ந்து அந்த படத்தின் போஸ்டர், டிரைலர் போன்றவை மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்தது. சமிபத்தில் கோப்ரா படம் வெளிவந்தது. படத்தில் விக்ரம் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் கதை காலம் சரியில்லாதது மற்றும் படத்தின் நீளம் அதிகம் இதுவே படத்தின் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் விக்ரமின் கோப்ரா படம் ஆரம்பத்திலேயே சுமாரான வசூலை அள்ளியது தொடர்ந்து இந்த படம் ஓடினாலும் இதுவரை இந்த படம் 13 நாட்களில் 55 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை 55 கோடி அள்ளி உள்ளது.

படக்குழுவுக்கு பாதிப்பை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அடிமேல்  அடிவாங்கும் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தை தான் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கிறாராம் இது வெற்றி பெறும் பட்சத்தில் அவரது மார்க்கெட் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.