இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிதான் வலிமை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியா.? வைரலாகும் வீடியோ.

கடந்த 24 ஆம் தேதி அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் தன் வலிமை இந்த திரைப்படத்தை மக்கள் குடும்பத்துடன் பார்த்து வருகிறார்கள் இந்த திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் படத்தில் அஜித்துடன் ஹீமா குரோஷி, கார்த்திகேயா ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருப்பார் அதுமட்டுமில்லாமல் சமுதாயத்தில் இளைஞர்கள் பலரும் தவறான வழிகளில் செல்லக்கூடாது பெற்றெடுத்த பெற்றோர்களை நினைத்துப் பாருங்கள் என்பதை மிகவும் தத்துரூபமாக வினோத் அவர்கள் கூறியிருப்பார். இந்த திரைப்படத்தில்  அஜித் பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன.

மேலும் வலிமை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் கார்த்திகேயா அஜித் குடும்பத்தை கடத்தி வைத்துக்கொண்டு அஜித்துடன் மோதுவார் அதேபோல் வில்லன் கார்த்திக்கேயாவுடன் இருக்கும் இளைஞர்களை காப்பாற்றி அவர்களை அனைவரும் அவரவர் குடும்பத்துடன் அனுபவிப்பது போல் காட்சி அமைந்திருக்கும்.

இந்த காட்சி ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் வந்ததாக பலரும் ஒரு வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள் அதாவது வலிமை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஜாக்கிசானின் நியூ போலீஸ் ஸ்டோரி என்ற படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி போல் இருப்பதாக கூறி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் நெட்டிசன்கள் வெளியிட்டு விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அஜித் குடும்பத்தை கட்டி தொங்க விட்டு இருப்பது அதே போல் இந்த திரைப்படத்திலும் இருக்கிறது என குறிப்பிட்டு வருகிறார்கள்.

Leave a Comment