வயசான சிங்கத்தை அணியில் இருந்து ஒதுக்கிய சென்னை அணி.! தலையில் கைவைத்த csk ரசிகர்கள்…

2022 கான ஐபிஎல் போட்டி முடிந்து நான்கு மாதங்கள் ஆகிய நிலையில் அதற்குள் 2023 கானா ஐபிஎல் போட்டி ஏலம் தொடங்க உள்ளது. அதாவது 2023 காண ஐபிஎல் போட்டியின் ஏலம் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி தொடங்க உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த ஏலம் கேரளாவில் உள்ள கொச்சின் பகுதியில் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஐபிஎல் இல் கலந்து கொள்ளும் அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது அந்த வகையில் நேற்று சென்னை அணியும் போட்டியாளர்களின் லிஸ்ட்டை வெளியிட்டது அதில் சிஎஸ்கே அணியின் ஆல் ஆல் ரவுண்டர் சென்னை அணியில் இல்லாதது ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது.

2023 ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டர் பிராவோ விளையாடுவதில்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடர்களில் அதிக முறை வென்ற அணியும் அதிக முறை பிளே ஆப் சென்ற அணியாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்ந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் 4.4 கோடி கோடி விலை கொடுத்து பிராவோ கைப்பற்றியது சிஎஸ்கே. 39 வயதான பிராவோ இந்த ஆண்டு சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளாமல் அவரை வெளியேற்றியுள்ளது சிஎஸ்கே அணி இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சிஎஸ்கே அணியில் இருந்து பாவாவை தக்க வைக்காமல் வெளியேற்றியது சரியான முடிவு தானா? என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது அது மட்டுமல்லாமல் 2023 ஐபிஎல் போட்டிகளில் விளையாட சென்னை அணி தக்க வைத்து கொண்ட வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது இதோ அந்த பட்டியல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம் எஸ் தோனி, டேவிட் கன்வே, ருத்ராஜ், அம்பத்தி ராயுடு, மொயின் அலி, சிவம் துபே, ஜடேஜா போன்ற வீரர்கலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது. ஆனால் பிராவோவை ஏன் அணியில் இருந்து நீக்கினிர்கள் என்று கேள்வி எழுந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் 2023 காண ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக தற்போதும் எம் எஸ் தோனி அவர்கள் தான் வழிநடத்த உள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment