சந்திரமுகி 2 படத்தை தூக்கி நிறுத்திய கதாபாத்திரங்கள்.! வேட்டையன்னாக ஸ்கோர் செய்த சத்ரு

Chandramukhi 2 : 2005 லிருந்து ஒரு படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது என்றால் அது சந்திரமுகி 2 தான்.. ஒரு வழியாக பி வாசு இயக்கத்தில் உருவாகி கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை என்னவென்றால்..  அண்ணன் தம்பி என்ன சொந்த பந்தங்களுடன் ராதிகா வாழ்கிறார் ஆனால் திடீரென அடுத்தடுத்த அசம்பாவிதங்கள் நடக்க..

இதிலிருந்து மீண்டு வர தன்னுடைய சொந்த கோயிலுக்கு போய் ஒரு பூஜை பண்ணுங்கள் என  சாமியார் கூற உடனடியாக தனது குடும்பத்துடன் போகிறார். இவர்களுடன் ராதிகாவின் பேரன் பேத்திகள் மற்றும் ராகவா லாரன்ஸ் இணைகின்றனர் இவர்கள் தங்கும் அரண்மனை ஒரு பேய் அரண்மனை ஆனால் அதை வடிவேலு மறைத்து காசுக்காக உள்ளே அனுமதித்து விடுவார்.

குடும்பத்துடன் முதலில் குலதெய்வ கோயிலுக்கு போகிறார்கள் ஆனால் செடி கொடுங்கள் என கோயில் பழுதடைந்து இருண்டு போய் காணப்படுகிறது. இதனால் சுத்தம் பண்ண ஆரம்பிக்கின்றன்ர். அதனால் வீட்டில் அசம்பாவிதம் மற்றும் வேலை செய்பவர்கள் அடுத்தடுத்து மரணம் அடைவது என தொடர்ந்து பீதியை ஏற்படுத்துகின்றனர்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என கண்டுபிடிக்கும் பொழுது சந்திரமுகி வேலை என தெரிய வருகிறது. அந்த சந்திரமுகி நீங்கள் இருக்கும் வீட்டில் ஒருவரை உடலில் இருக்கிறார் என தெரிய வரும் பொழுது குடும்பமே அலறுகிறது.  கடைசியில் லட்சுமி மேனன் உடம்பில் தான் சந்திரமுகி இருப்பதை உணர்ந்து கொண்ட குடும்பம் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்  சகஜமாக பழகுகின்றனர்.

இந்த நேரத்தில் தான் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக மாறிவிடுகிறார் பிறகு சந்திரமுகிக்கும், வேட்டையனுக்கும் நடக்கும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக அரங்கேறி முடிகின்றன. படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்திருந்தாலும் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே படத்தை தூக்கி நிப்பாட்டுகின்றன.

லட்சுமி மேனன் :   படத்தில் ஊனமுற்றவராக நடித்திருந்தார். இவர் எதர்ச்சியாக ஒரு மணியை எடுத்து கழுத்தில் மாட்ட அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகியாக மாறுகிறார். குடும்பத்தினர் கண்டுபிடிக்க பின் தன்னுடைய பழிவாங்கும் வேட்டையை ஆரம்பிக்கிறார். இவருடைய சீன் ஒவ்வொன்றும் நம்மை சீட்டு நுனியில் உட்கார வைக்கும்.

சத்ரு : ராகவா லாரன்ஸ் நிகராக சந்திரமுகி படத்தில் கைதட்டல் வாங்கியவர் என்றால் இவர்தான் ஃப்ளாஷ் பேக் காட்சியில்  வேட்டையனாக ஆக்ரோஷமாக சண்டை போடுவது இவருடைய பேச்சு என அனைத்தும் மிரளவைத்தது இவர் படத்தில் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருந்தால் அது படத்திற்கு பிளஸ் ஆக இருந்திருக்கும்.

ராகவா லாரன்ஸ் : என்ட்ரி சீனில் சில சொதப்பல்கள் இருந்தாலும் பிளாஷ் பேக் காட்சியில் செங்கோட்டையனாக மாறி சந்திரமுகி மேல் காதல் வயப்படுவது மேலும் அவரை கொலை பண்ணுவது என ஒவ்வொரு சினும் மிரட்டலாக இருக்கும்.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் சொந்தபி விட்டனர்.

கங்கனா ரனாவத் :  சந்திரமுகியாக இவரது  நடனம் மற்றும் சென்டிமென்ட் போன்ற சீன்களில் நடித்து கைதட்டல் வாங்கினார் இருந்தாலும் ஜோதிகா அளவிற்கு இவரால் நடிப்பை கொண்டு வர முடியவில்லை.

ரியோ ரமேஷ் : படத்தில் குருஜியாக நடித்தார். சந்திரமுகி யார் உடம்பில் இருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பது மேலும் சந்திரமுகியை எப்படி நாம் சமாளிக்க வேண்டும் என ஒவ்வொரு சீனையும் குடும்பத்துக்கு எடுத்து என ஒவ்வொரு சீனிலும் மிரட்டி இருப்பார்.