விஜய் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரம்.? அம்மாவால் நிறைவேறாமல் போன கனவு.. அவரே சொன்ன தகவல்

Vijay : தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் நிற்கக்கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் இந்த ஆண்டு வெளியான வாரிசு, லியோ படங்கள் ஹிட் அடித்ததை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்து “தளபதி 68” படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

விஜய் இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதில் ஒன்று ரொம்ப இளமையான தோற்றத்தில் வந்து போவார் என கூறப்படுகிறது விஜய் உடன் இணைந்து லைலா, சினேகா, மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த்,  விடிவி கணேஷ், யோகி பாபு, அஜ்மல் அமீர், அரவிந்த் ஆகாஷ், மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி கங்கை அமரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து வருகின்றனர்.

பிரசாந்த் இந்த நிலைமைக்கு காரணம் சத்யராஜ் தான்.! பலருக்கும் தெரியாத தகவல்…

படம் அடுத்த வருடம் முக்கிய நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் பழைய பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த கதாபாத்திரம் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது எனக்கு ஹீரோ கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ரொம்பவும் பிடிக்கும்..

குறிப்பாக அமாவாசை படத்தில் சத்யராஜ் நடித்த அம்மாவாசை கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ரொம்ப ஆசை.  ஒரு படத்தில்  ஹீரோ கலந்த  வில்லன் பண்ணினேன் அதில் ஹீரோயின் அப்பாவை நான் தள்ளி விடுவேன் அதை என்னுடைய அம்மா ஒரு பொது ஆடியன்ஸாக படத்தை பார்த்துவிட்டு..

நகைச்சுவை நடிகர் போண்டாமணி காலமானார்.. வீட்டில் நடந்த சம்பவம் – கண்ணீரில் திரைப்பிரபலங்கள்

இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நீ நடிக்காதே என கூறினார் அன்றிலிருந்து இதுவரை அந்த கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தாலும் நான் நடிக்கவில்லை என கூறியிருக்கிறார் அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version