விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுதான்.? மாஸ்டர் படத்தில் பார்த்ததை விட பலமடங்கு மிரட்ட ரெடியான மக்கள் செல்வன்.

உலக நாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமா பக்கம் திசை திரும்பியுள்ளார் அதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை தான். இந்த கதை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஆக்சன் கலந்த் படமாக இருந்ததால் கமலுக்கு ரொம்ப பிடித்து போய் உடனடியாக இந்த படம் தொடங்கப்பட்டது

இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களான விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் போன்ற டாப் நட்சத்திர நடிகர்கள் மற்றும் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர் இந்த படம் மிக விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

விக்ரம் படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்த தகவலை நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் கூறியுள்ளார்.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். இதுபோன்று மனிதனின் மற்றொரு  இருண்ட பக்கத்தை காட்டுவதே எனக்கு பிடித்தமான ஒன்று நான் வில்லனாக நடிப்பது திரைகளில் பார்ப்பதன் மூலம் என் நிஜ வாழ்க்கையில் வாழ முடியாத ஒரு வாழ்க்கையை வாழ்வது போன்று உணர்கிறேன்.

திரையில் காண்பிக்கப்படும் எந்த ஒரு வில்லனின் நடிப்பும் ஒரே மாதிரியாக இருக்காது மாஸ்டர் மற்றும் உபென்னா படத்தில் எனது கதாபாத்திரம் ஒரே மாதிரியாக இருக்காது அதே போல் தான் விக்ரம் படத்தில் என்னுடைய நடிப்பும் ஒரு மனிதனின் மிகவும் மோசமான பக்கத்தை தெளிவாக காட்டியிருப்பேன் என கூறினார்.

Leave a Comment

Exit mobile version