பாரதி கண்ணம்மா சீரியலில் “கண்ணம்மா” கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலம் இவர் தான்.! வெளியான தகவல்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் பலரின் ஃபேவ்ரட் சீரியல்கள் அதிலும் குறிப்பாக இரவில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் அனைத்தும் டி ஆர் பி யில் டாப் லிஸ்டில் இருக்கும் தொடராகும்.

இதில் தொடர்ந்து பல வருடங்களாக டிஆர்பி யில் முக்கிய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பது பாரதிகண்ணம்மா சீரியல். இதில் ஹீரோவாக அருண் பிரசாத் மற்றும் வினுஷா தேவி நடித்து வருகின்றனர். இதில் தற்போது பாரதி டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

அதற்காக மருத்துவக்குழு பல முயற்சிகளை செய்து வேறு மருத்துவமனையிலிருந்து அந்த குழந்தைக்கு இதயம் பல தடைகளைத் தாண்டி கொண்டுவரப்படுகிறது இப்படி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவிக்கு முன் ரோஷினி என்ற மாடல் பிரபலம் நடித்து வந்தார். ரோஷினியின் நடிப்பு மக்கள் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது அப்படி ரோஷினிக்கு பல ரசிகர்களும் உருவாக்கினர்.

பின்பு ஒரு கட்டத்தில் ரோஷினி பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறினார்  தற்போது இவர் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினிக்கு முன் வேறு ஒரு பிரபலம் தான் நடிக்க இருந்தாராம். முதன்முதலில் இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு பவித்ரா ரெட்டி என்பவர் தான் நடிக்க இருந்தார் பின்பு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதை அடுத்து ரோஷினிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Leave a Comment