ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க இருந்த விஜயகாந்தை தடுத்து நிறுத்திய பிரபலம்.!

பொதுவாக சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் தன்னுடைய படத்தில் நடித்து அது மிகப்பெரிய வெற்றி பெறும் மேலும் ஒரே திரைப்படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடித்தால் அது சொல்லவா வேண்டும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் 80,90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த கமல்-ரஜினி, கமல்-விஜயகாந்த், ரஜினி-பிரபு,கமல்-பிரபு என்ற பல முன்னணி நடிகர்கள் இணைந்து இரண்டு ஹீரோ படங்களில் நடித்துள்ளனர்.

மேலும் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து மிரட்டி உள்ளனர் அந்த வகையில் கமல்- ரஜினி,கமல்-சத்யராஜ் என்று ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததும் உண்டு. கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி வில்லனாக நடித்து அதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்தவர் தான் நடிகர் ரஜினி. இவர் கருப்பாக இருந்தாலும் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இவரை தொடர்ந்து கருப்பாக ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதே நிறத்தில் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் விஜயகாந்த்.எனவே எப்படியாவது ஹீரோவாகி விட வேண்டும் என்ற வெறியோடு விஜயகாந்த் அதிகமாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். ஆரம்ப காலத்தில் அவருடைய படங்கள் தோல்வி அடைந்தது அதன் பிறகு நல்ல வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினிகாந்த் முரட்டுக்காளை என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாக இருந்தார் அவருக்கு சரிசமமாக நடிக்கும் வில்லனாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில் விஜயகாந்தை தேர்வு செய்தனர் எனவே வில்லனாக நடிப்பதற்கு ஒரு லட்சம் சம்பளம் பேசி அதில் 25 ஆயிரம் முன் பணம் பெற்றுக்கொண்டு திரும்பி வந்துவிட்டார்.

vijay kandh
vijay kandh

விஜயகாந்த் இந்த விஷயத்தை தனது நண்பர் ராவுத்திரியிடம் கூறிய பொழுது அவர் விஜயகாந்தை திட்டி உன்னை நான் பெரிய ஹீரோவாக ஆக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் நீ இது போல் காரியத்தை கெடுத்து விட்டாய் என அந்த பணத்தை வாங்கிக் கொண்டாராம்.

அதனை ஏவிஎம் நிறுவனத்தில் திரும்பி கொடுத்துவிட்டு மன்னிப்பு கேட்டாராம் ராவுத்தர் விஜயகாந்த் அவர்களை நான் வில்லனாக நடிக்கலாம் என்று தன் மீது நம்பிக்கை குறைந்திருந்த நிலையில் ராவுத்தர் விடாப்பிடியாக விஜயகாந்த் மீது நம்பிக்கை வைத்து பிற்காலத்தில் அவரை ரஜினி,கமலுக்கு அடுத்தபடியாக நிலையில் கதாநாயகனாக ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment