ஆண்ட்ரியாவின் பிசாசு 2 படத்தை பார்த்து அலறி போன பிரபலம் – பின் மிஷ்கினிடம் வாய்ப்பு கேட்டார்.? தலை அசைத்தாரா.. இயக்குனர்.

தமிழ் சினிமாவில் மக்களை கவரும்படியான படங்களை அடுத்தடுத்து கொடுத்து தனது பெயரை நிலைநாட்டவே இயக்குனர்கள் ஆசைப்படுகின்றனர் ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு தன் படம் நல்ல கருத்தை மக்களுக்கு கொடுத்தால் போதும் என்பதையே வழக்கமாக வைத்துள்ளவர் தான் இயக்குனர் மிஸ்கின்.இவரது திரைப்படங்கள் எந்த ஒரு படத்தின் சாயலும் இருக்காது.

மேலும் இதுவரை பார்த்திராத புது படமாக இது இருக்கும் அப்படித்தான் இவர் ஒவ்வொரு படத்தையும் செதுக்கி உள்ளார். மேலும் இவரது திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதோடு மக்களுக்கு ஈஸியாகவே கனெக்ட் ஆகின்றன. இதனால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றது. சமீபகாலமாக இவரும் ஆக்சன் மற்றும் பேய் படங்களையே எடுத்து வருகிறார்.அந்த வகையில் பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். மேலும் 15 நிமிடம் ஒரு காட்சியில் மட்டும் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக எகிறி உள்ளது.சினிமா உலகில் சிறந்த இயக்குனர் என்ற பெயரைப் பெற்றிருந்தாலும் இவர் மீது ஒரு சில குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.

அது என்னவென்றால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர்-நடிகைகள் நடிக்கவில்லை என்றால் அந்த நடிப்பு வரும் வரையும் அவர்கள் மீது கோபப்படுவது டென்ஷனாவதை வழக்கமாக வைத்துள்ளாராம் இதை பல பிரபலங்கள் சொல்லிக் நாம் கேட்டு இருக்கிறோம் ஆனால் பிசாசு படத்தில் மட்டும் அப்படி கிடையவே கிடையாது செம கூல் ஆக ஒவ்வொரு இடமும் பொறுமையாக கையாண்டு படத்தின் கதைக்கு ஏற்றபடி நடிப்பை வாங்கி உள்ளார் மிஸ்கின்.மேலும் இந்த திரைப்படத்தை தயாரித்த பிரபலம் சமீபத்தில் படத்தை போட்டுக் காட்டியுள்ளனர்.

பிசாசு படத்தை பார்த்துவிட்டு அந்த தயாரிப்பாளர் மிரண்டு போனாராம் மேலும் மிஷ்கினிடம் குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுக்க சொன்னேன் அதற்கும் அவர் சொன்னது போலவே குறைந்த பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை எடுத்து அசத்திவிட்டார். இந்த திரைப்படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் அதேபோல மிஷ்கினின் அடுத்த படத்தையும் நான் இயக்க வேண்டும் என ஆசை தெரிவித்தேன் அதற்கும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என கூறினார்.

Leave a Comment