பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் வயிற்றில் இருந்த குழந்தை போச்சு என எமோஷனல் இன்டர்வியூ கொடுத்த பிரபலம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

0
bb jodigal 1
bb jodigal 1

பெரும்பாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் தமிழ் சின்னத்திரையில் சுவாரசியமான நிகழ்ச்சிகள் வழங்குவதில் முன்னணியில் இருந்து வருவது விஜய் டிவி தான். அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6 தொடங்க இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் ரசிகர்களின் கோரிக்கையின் படி சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் என்ன நடக்கிறதோ அதை அப்படியே போட்டு காமித்தார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசர்களின் கலந்து கொண்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் இந்த சீசனின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை சுஜாதா வருணி.

இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தாலும் மிகவும் அமைதியாக இருந்ததால் நீண்ட நாட்கள் இந்நிகழ்ச்சிகள் இவரால் நீடிக்க முடியவில்லை இதன் காரணமாக சில வாரங்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். சுஜாதா வருணி தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கதாநாயகியாகவும், குணசத்திர நடிகையாகவும், கவர்ச்சியாக நடனமாடும் ஒரு பாடல் நாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். பிறகு தயாரிப்பாளர் மகன் சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினர்களுக்கு தற்பொழுது ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் சீசன் 2 ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து போட்டியாளர்களும் தங்களுடைய கணவருடன் நடனமாடி வருகிறார்கள் அந்த வகையில் சுஜாதாவும் தன்னுடைய கணவர் சிவாஜி தேவ் அவர்களுடன் நடனமாடி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் நடனமாடியதன் காரணமாக சுஜாதாவின் வயிற்றில் இருந்த கரு கலைந்து விட்டதாக சிவாஜி தேவ் கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிபி ஜோடி நிகழ்ச்சிக்காக நாங்கள் பலவற்றை தியாகம் செய்திருக்கிறோம் அதாவது பேய் vs கடவுள் ரவுண்டை எல்லாரும் பார்த்திருக்கிறீர்கள் அப்பொழுது சுஜாதாவுக்கு மேடையிலேயே யூரின் வந்துவிட்டது.

sujatha varuni
sujatha varuni

நாங்கள் அதிகமாக நடனமாடியதால் இப்படி நடந்திருக்கும் என நினைத்தோம் அதன் பிறகு வாந்தி, மயக்கம் என இருந்ததால் மருத்துவரை சந்திக்கும் பொழுது அவர் சுஜாதா கர்ப்பமாக இருப்பதை கூறினார் இது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது ஏனென்றால் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டுமென பல நாட்களாக ஆசைப்பட்டு வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் மருத்துவரிடம் நாங்கள் ஆலோசிக்காமல் மீண்டும் தொடர்ந்து நடனம் ஆடியதால் சுஜாதாவுக்கு கரு கலைந்து விட்டதாக மருத்துவர் கூறியிருந்தார்.

இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது பிறகு மருத்துவர் சுஜாதாவை ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என கூறினார்கள் ஆனால் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக அதனைப் பற்றி பொருட்படாமல் மீண்டும் நடனம் ஆடுவதை தொடர்ந்தோம் என இவர் எமோஷனலாக கூறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.