கடிக்க வந்த நாயிடம் இருந்து தங்கையை காப்பாற்றிய அண்ணன்.! ஆனால் சிறுவன் முகத்தில் மட்டும் 90 தையல் ஆதாரம் உள்ளே

அண்ணன்,தங்கை என்றாலே அதற்கு தனி பாசம் நம் உலகில். பெற்றோர்களை விடவும் அண்ணன் தங்கையின் மீது வைக்கும் பாசம் தான் அதிகம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தங்கைக்கு துணையாக இருப்பார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் வயோமிங் பகுதியை சேர்ந்த பிரிட்ஜர் வாக்கர் என்னும் ஆறு வயது சிறுவன் தன் தங்கையை காப்பாற்ற நாயிடம் சண்டை போட்டு தன் உடம்பில் 90 தையல்கள் வரும் அளவிற்கு நாயிடம் போராடியுள்ளார். அந்த சிறுமிக்கு தற்போது நான்கு வயது மட்டுமே ஆகிறது.

இந்தநிலையில் தனது தங்கையை கடிக்க வந்த நாயை குறுக்கே சென்று நாயிடம் பல இடங்களில் காயம்பட்டு இருந்தாலும் தொடர்ந்து தன் தங்கைக்காக நாயிடம் போராடி தனது தங்கையை காப்பாற்றியுள்ளார்.

இந்தநிலையில் அந்த சிறுவனுக்கு 90 தையல்கள் போட்டுள்ள நிலையில் அவருடைய உறவினர்கள் இது குறித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் தற்போது இந்த செய்தியை கேட்ட பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் இவர் செய்த செயலைப் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் அந்தப் பையனின் அப்பா இவரிடம் ஏன் குறுக்கே சென்று நாயுடன் போராடினாய் என்று கேட்கும் பொழுது தன் தங்கை இருக்க வேண்டும் இல்லை என்றால் நான் இருக்கவேண்டும் இருவர்களில் யார் இருக்க வேண்டும் இன்று முதல் முடிவு செய்தேன் என் தங்கை தான் எனக்கு முக்கியமாக தோன்றினாள் எனவே அவளுக்காக என்ன வேணாலும் செய்யலாம் என்று முடிவெடுத்து அந்த நாயுடன் போராடினேன் என கூறியுள்ளார். இந்த செய்தி தற்பொழுது பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

https://www.instagram.com/p/CCjDnLngOYO/?utm_source=ig_embed

Leave a Comment