பாகுபலி படத்தில் அசத்தலான நடிப்பை வெளிபடுத்திய நடிகரின் தம்பி.? ஹீரோவாக என்ட்ரி- யாக உள்ளார்.? விவரம் இதோ.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் ராணா டகுபதி. தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான ஆரம்பம் என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு நண்பராக நடித்து முதலில் தனது பயணத்தை மேற்கொண்டார் அதனை தொடர்ந்து இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.

அந்த திரைப்படங்கள் இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது இருப்பினும் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்,சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான பாகுபலி சீரியஸ் மிகப்பெரிய அளவில் அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்ததால் தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறி உள்ளார் ரணா. சினிமா வெற்றிநடை கண்டுவருகிறார்

இவரைத் தொடர்ந்து தற்போது இவரது சகோதரர் அபிராம் என்பவரும் சினிமா உலகில் ஹீரோவாக என்ட்ரி ஆக உள்ளார். இவர் நடிக்க உள்ள திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் எடுத்த தேஜா என்பவர் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் ஹீரோவின் அப்பா சுரேஷ் பாபு என்பவர் இந்த திரைப்படத்தை எடுக்க உள்ளார்.

இந்த படம் கொரோனா இரண்டாம் கட்ட அலை குறைந்த பின் படத்தின் சூட்டிங் தொடங்கும் என கூறினார் மேலும் இது குறித்து பேசிய அறிமுகமாக உள்ள ஹீரோ அபிராம்.

என்னை நடிகனாகி பார்க்க வேண்டும் என்பது என் தாத்தாவின் ஆசை ஆனால் அவர் உயிரோடு இருந்திருந்தால் நான் முன்பே சினிமாவுலகில் ஹீரோவாக நடித்து இருப்பேன் ஆனால் அது நடக்க முடியாமல் போனது தற்பொழுது எனது தந்தையின் ஆதரவுடன் நான் ஹீரோவாக அறிமுகமாக உள்ளேன் என்று கூறினார்.

Leave a Comment