இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மாஸ் காட்டும் துணிவு.! உற்சாகத்தில் ரசிகர்கள்…

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் வாசூலிலும் நல்ல லாபம் பார்த்தது.

துணிவு திரைப்படத்துடன் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியானது இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்த இந்த இரண்டு திரைப்படங்களில் வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

இதனை தொடர்ந்து கடந்த எட்டாம் தேதி நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியான துணிவு திரைப்படம் அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் எந்த ஒரு தமிழ் திரைப்படமும் செய்யாத சாதனையையும் துணிவு திரைப்படம் செய்து வருகிறது. அந்த வகையில் துணிவு திரைப்படம் netflix தளத்தில் கடந்த வாரம் முதல் நான்கு இடத்தை துணிவு திரைப்படம் பிடித்திருந்ததை அதிகாரப்பூர்வமாக துணிவு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதாவது இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் துணிவு திரைப்படம் டாப் லிஸ்டில் இடம்பெற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் netflix தளத்தில் முதல் மூன்றாவது இடத்தில் துணிவு திரைப்படம் இடம்பெற்று இருப்பதை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏகே 62 திரைப்படம் தயாராகி வருகிறது இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி கொண்டே இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் இவர்களுடைய கவலையை நீக்க தற்போது துணிவு திரைப்படத்தின் அப்டேட்டை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள இந்த அறிவிப்பு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த அறிவிப்பு.

Leave a Comment