நியூசிலாந்துடனான மூன்றாவது 20 ஓவர் போட்டியில் எனக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு வேண்டுமென கேட்ட பந்துவீச்சாளர் – ஷாக்கான கேப்டன் ரோஹி.த்

இந்திய அணியின் 20 ஓவர் போட்டிக்கு புதிய கேப்டனாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் ரோகித் சர்மா தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்திய இந்தியா – நியூசிலாந்து 20 ஓவர் போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றியை ருசித்தது மூன்று போட்டிகளிலும் சிறப்பான ஆட்டம் மற்றும் எந்த பில்டரை எங்கு வைக்க வேண்டும் எந்த பவுலரை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.

என்பதை துல்லியமாக செய்து அசத்தினார் ரோகித் சர்மா ஒவ்வொரு போட்டியையும் ரசிக்கும்படி இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடினர்.அதுவும் கடைசி போட்டி சொல்லவே வேண்டாம் மிக சுறுசுறுப்பாக இருந்தது ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா தனது அதிரடி காட்டி அசத்தினார். அவரை தொடர்ந்து வந்த இளைஞர்கள் பலரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய ரோகித் சர்மா. துவக்கம் சரியாக அமைந்து விட்டால் நல்ல ஸ்கோரை எட்ட முடியும் என்பது கணிப்பு அதை நாங்கள் செய்து காட்டினோம். பிட்சின் தன்மையை என்னவென்று தெரிந்து விட்டால் நம்மால் அதற்கேற்றவாறு ஆட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும் இந்த போட்டியில் பேட்டிங் சாதகமாக இருந்தது கூடவே பனியும் முன்கூட்டியே வந்துவிட்டது கேஎல் ராகுல் இந்த போட்டியில் களம் இறங்கவில்லை அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர்.

இருந்தார் இருப்பினும் அவரை உட்கார வைத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். மேலும் ஸ்பின்னர்கள் வேற லெவல் அஸ்வின், அக்ஷர் ஆகியோரின் பந்து வீச்சு அபாரம் கடைசி போட்டியில் சிறப்பாக பந்து வீசி சாஹல் அசத்தினார் போதாத குறைக்கு வெங்கடேஷ் ஐயர் சில ஓவர்கள் வீசி தனது திறமையை வெளிக்காட்டினார்.

இந்திய அணியில் 8, 9 வரை பேட்ஸ்மேன்கள் இருந்தனர். கடைசி போட்டியில் கூட ஹர்ஷா, தீபக் சஹார் ஆகியோர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஹர்ஷா  அரியானா அணிக்காக ஓபனிங் வீரராக விளையாடி வருகிறார் தீபக் சஹர் இலங்கை அணிக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது இந்திய அணிக்கு நல்ல பலமாக அமைந்தது பந்து வீச்சாளர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அவர்களைப்போல கடைசி போட்டியில்  எனக்கு பேட்டிங் வேண்டுமென பந்துவீச்சாளர் சாஹல் கேட்டார் ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இருக்கும் வீரர்கள் அனைவரும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற உதவினர் என கூறினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment