அடக்கம் செய்யாமல் 3 மணி நேரம் குழிக்கு அருகில் போடபட்ட கொரோனாவால் உயிரிழந்த நர்சின் உடல்!! 5 பேர் மீது வழக்கு.!

கொரோனா தோற்றால் உயிரிழந்த நர்சின் உடலை மூன்று மணி நேரமாக போராடிய பிறகுதான் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா தொற்றுலிருந்து பலரை காப்பாற்றும் நேரத்தில் இப்படி ஒரு நிலமை ஏற்பட்டுள்ளது. இந்த செயல் வேதனை தரும் விதமாக அமைந்துள்ளது.

அதாவது ராணிப்பேட்டை சேர்ந்த அர்ச்சனா என்கின்ற நரசிற்கு கடந்த 31ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் வேலூரில் உள்ள cmc மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவர் சொந்த ஊரான ராணிப்பேட்டையில் உள்ள நவல்பூரில் இவர் உடலை அடக்கம் செய்ய இவர்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தார்கள். பிறகு நர்ஸ் அர்ச்சனாவின் உடல் ஆம்புலன்ஸில் அவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அர்ச்சனாவின் உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஊர் பொதுமக்களிடம் பேசிய பிறகு இவர்கள் அர்ச்சனாவின் உடலை வீட்டிற்குக் கொண்டு வரக்கூடாது நேரடியாக புதைத்து விட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட காவலர்கள் அர்ச்சனாவின் உடலை புதைப்பதற்காக தோண்டப்பட்ட குழியின் பக்கத்தில் 3 மணி நேரம் அவரின் உடலை வைத்தார்கள். மீண்டும் ஐந்து பேர் இதனை ஏற்றுக் கொள்ளாததால் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மூன்று மணி நேரம் குழியின் பக்கத்திலேயே கிடந்த பிறகுதான் நர்ஸ் அர்ச்சனாவின்  உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த செயல் பெரும் வேதனை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

 

Leave a Comment