வாரிசு படத்தின் ட்ரெயிலரை மீம்ஸ் போட்டு பங்கமாக கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்.! கடுப்பான விஜய் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் எந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானாலும் அதனை ப்ளூ சட்டை மாறன் மீம்ஸ் போட்டு பங்கமாக கலாய்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதனை ப்ளூ சட்டை மாறன் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.

அதாவது தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தினை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரித்துள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இதனை அடுத்து விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் இவரை தொடர்ந்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, ஷாம், சம்யுக்தா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் மேலும் இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ள நிலையில் வருகின்ற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி அன்று வாரிசு திரைப்படம் ரிலீஸ்சாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் யூடியூபில் அதிக வியூஸுகளை குவித்து பெரிய சாதனை படைத்தது மேலும் விஜய்யின் ரசிகர்களும் இந்த ட்ரெய்லரை கொண்டாடி வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரிசு படத்தின் ட்ரெயலருக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகிறது பல படங்களை காப்பியடித்துள்ளது என்றும் படம் ஸ்லோவாக இருப்பது போல் தெரிகிறது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

ஆனால் மறுபுறம் விஜய் ரசிகர்கள் என்டர்டைன்மென்ட் எமோஷனல் போன்ற காட்சிகளிடம் பெற்று இருப்பதால் குடும்பத்துடன் சென்று வாரிசு திரைப்படத்தினை பார்க்கலாம் என கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் வாரிசு திரைப்படத்திற்கான ட்ரெய்லரை மீம்ஸ்கள் போட்டு கலாய்த்து வருகிறார்கள். அந்த வகையில் திரைப்பட இயக்குனரும், யூடியூப் விமர்சகர்மான ப்ளூ சட்டை மாறன் மீம்ஸ் போட்டு வாரிசு பல ட்ரெய்லரை கலாய்த்துள்ளார்.

பிரண்ட்ஸ் படத்தில் இடம் பெற்றிருக்கும் வடிவேலுவின் கடிகாரம் காமெடி ஸ்டைலை பதிவிட்டு அப்பாடா நான் கூட புதுசுன்னு நினைச்சு பயந்துட்டாங்க என அஜித் ரசிகர்கள் கூறுவது போல் இருக்கும் டுவிட்டை ஷேர் செய்துள்ளார். இவ்வாறு ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்விட் வைரலாக விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment