“கேப்டன் பிரபாகரன்” படத்தில் வாங்கிய அடிகள் கொஞ்ச நெஞ்சம் கிடையாது.? 10 நாள் பாத்ரூம் கூட போக முடியவில்லை – பிரபல நடிகர் புலம்பல்.!

மன்சூர் அலிகான் சினிமா உலகில் ஹீரோ வில்லன் முக்கிய கதாபாத்திரம் காமெடி என அனைத்து விதமான கதாபாத்திரத்திலும் தனது முழு திறமையை வெளிக்காட்டி நடித்தவர். தற்பொழுது கூட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமா ஆரம்பத்தில் மன்சூர் அலிகான் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மிரட்டலான கதாபாத்திரம் அப்பொழுது ரசிகர்களை நெடுநெடுங்க வைக்கும் அந்த வகையில் கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த்க்கு மிக சவாலாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார் மன்சூர் அலிகான்.

1991 ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் உடன் கைகோர்த்து மன்சூர் அலிகான், ரூபினி, ரம்யா கிருஷ்ணன், லிவிங் ஸ்டண்ட், சரத்குமார், காந்திமதி நம்பியார் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்த படம் ஆக்சன் சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகியிருந்தது. இந்த படத்தில் மெயின் வில்லனாக மன்சூர் அலிகான் விஜயகாந்த்க்கே சவால் விடும் வகையில் வீரப்பன் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருந்தார். அண்மையில் பேட்டி ஒன்றில் கேப்டன் பிரபாகரன் படம் குறித்து அவர் பேசியது. இந்த படம் எனக்கு மிகவும் சவாலான படமாக இருந்தது.

இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மிகப்பெரிய சண்டை நடந்தது அந்த சண்டை முடிந்த பிறகு என்னால் பத்து நாள் கழிவறையில் கூட சரியாக உட்கார முடியவில்லை அந்த அளவிற்கு உடம்பில் பல இடத்தில் அடிபட்டது மேலும் பல இடத்தில் தசைகள் அப்படியே பிடித்துக் கொண்டன இதனால் ரொம்ப கஷ்டப்பட்டேன் என கூறினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment