துக்க நேரத்திலும் அஜித் செய்த மிகப்பெரிய விஷயம்.. பாராட்டி தள்ளிய நடிகர் பார்த்திபன்.

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் நடிகர் அஜித்குமார் இவர் அண்மைக்காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சமூக அக்கரை கலந்த ஒரு படமாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறுகின்றன அப்படி கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம்  நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றியடைந்தது.

அதனைத் தொடர்ந்து தனது 62வது படத்தில் நடிக்க இருக்கிறார். திரையுலகில் மாபெரும் ஸ்டார் ஆக ஜொலிக்கும் அஜித் பலருக்கும் உதவி செய்பவராக இருப்பதால் இவர் நல்ல மனிதராக பார்க்கப்படுகிறார் இப்படிப்பட்ட அஜித்திற்கு நேற்று ஒரு அதிர்ச்சி செய்தி வந்தது அதாவது..

நேற்று அதிகாலை 4:30 மணிக்கு அஜித்தின் அப்பா சுப்பிரமணியம் அவர்கள் பக்கவாத நோயின் காரணமாக சில காலங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது இறந்தார் என தகவல் வெளியாகியது. விஷயத்தை கேள்வி பட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் வர முடியாதவர்கள் சமூக வலைதள பக்கத்தில் அனுதாபங்களை  தெரிவித்தனர்

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் நடிகர் அஜித்தைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்..  தந்தையின் மறைவின் பொழுது நண்பர் அஜித் உள்ளூரில் இருந்தது நல்லது.. சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொன்னார்.

மயானம் செல்ல தயாரான பொழுது கார் இல்லாமல் என்னருகில் சோழ பொன்னுரங்கம் அமராவதி தயாரிப்பாளர் நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லி சென்ற பண்பு அவருக்கானது என பார்த்திபன் கூறி இருக்கிறார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்படி ஒரு துக்கத்திலும் பழசை மறக்காமல் இருப்பது தான் அஜித்தின் ஸ்டைல் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment