“வாரிசு” படத்தை தமிழகத்தில் ரிலீஸ் பண்ணும் மிகப்பெரிய நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!

0
varisu
varisu

தளபதி விஜய் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து  ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையாக உருவாகியிருக்கிறது.

அதேசமயம் இந்த படத்தில் ஆக்சன், ரொமான்ஸ்,  காமெடி என அனைத்தும் இருக்கும் என கூறப்படுகிறது இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீசாக இருக்கிறது என படக்குழு ஏற்கனவே அறிவுறுத்தியது ஆனால் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தெலுங்கு படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் சொன்னது இதனால் தெலுங்கில் தேதிமாறி ரிலீஸ் ஆகும் என ஒரு பக்கம் வதந்திகள் கிளம்புகின்றன.

ஆனால் படக்குழுவோ இரண்டிலும் ஒரே தேதியில் வெளியிட முனைப்பு காட்டி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில்  வாரிசு படத்திலிருந்து ஒரு சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் யார் ரிலீஸ் செய்கிறார் என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயின் வாரிசு திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தான் டிஸ்ட்ரிபியூஷன் பண்ணுகிறது. அதற்கான வேலைகளிலும் தற்பொழுது இறங்கி உள்ளதாம். இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..