“விக்ரம்” படத்தை எதிர்த்து போட்டி போடும் பிரம்மாண்ட பட்ஜெட் படம் – ஆண்டவர் ஜெயிப்பாரா.?

உலகநாயகன் கமலஹாசன் ஒரு கட்டத்தில் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில் தனது ரூட்டை மாற்றி அரசியல், சின்னத்திரை நிகழ்ச்சி, தொழில் நிறுவனங்கள் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருவதால் சமீபகாலமாக தொடர்ந்து அவரால் திரைப்படங்களை கொடுக்க முடியவில்லை.

அந்த வகையில் கடந்த 4 வருடங்களுக்கு பிறகு தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலுக்கு கதை கூற அந்த கதை கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்துப்போக படத்தின் டைட்டில் விக்ரம் என வைக்கப்பட்டு படம் உருவாகி உள்ளது. இந்த படம் பான் இந்திய திரைப்படமாக  உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் விக்ரம் படம்.

வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ள நிலையில் கமலஹாசனின்.

இந்த படத்திற்கு போட்டியாக ஹிந்தியில் பிரமாண்ட பட்ஜெட்டில் யாஷ் ராஜ் தயாரிப்பில் சந்திரபிரகாஷ் இயக்கத்தில் அஜய் குமார். நடிப்பில் உருவாகியுள்ள பிரித்விராஜ் படமும் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளதாம். இந்த படத்தின் கதைப்படி 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரித்விராஜ் சவுகான் என்ற மன்னனின் வரலாற்று கதையை எடுத்துரைக்க..

உள்ளதால் பாகுபலி படம் போன்று சூப்பர் ஹிட் அடிக்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர் மேலும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஒரு சில ஏரியாவில் விக்ரம் படத்தின் வசூலை முறியடிக்க இந்த படம் ரெடியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment