ரஜினி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் பிரமாண்ட நிறுவனம்.! 4 வது முறையாக இணைய இருக்கிறார்கள்.

0

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து பல ஆண்டுகாலமாக தற்பொழுது வரையிலும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். பல நடிகர்கள் அறிமுகமான  காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த விட்டு அதன் பிறகு குணசித்திர நடிகராக நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி அப்படி எல்லாம் செய்யாமல் தொடர்ந்து ஹீரோவாக மட்டும் நடித்து கலக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்பொழுது உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகைகள் கூட ஜோடியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும்,தங்கையாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ரஜினிக்கு முறை பெண்களாக மீனா மற்றும் குஷ்பு போன்ற திரைப்பிரபலங்கள் இணைந்து நடிப்பதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று கூறியுள்ளார்கள். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது வரையிலும் ரஜினிகாந்த் 168 திரைப் படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் அண்ணாத்த திரைப்படம் இவரின் 168ஆவது திரைப்படம். இதனை தொடர்ந்து ரஜினிகாந்தின் 169 திரைப்படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

இதற்கு முன்பு பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் எந்திரன், பேட்ட,அண்ணாத்த திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளது. ரஜினிகாந்தின் 169 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இவர் இவர்களில் ஒருவர் இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.