லோகேஷ் கனகராஜை தொடர்ந்து அட்லீ செய்யபோகும் சிறப்பான சம்பவம் – ஒத்துக் கொள்வாரா.. தளபதி விஜய்.?

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, பிகில், மெர்சல்  போன்ற சிறப்பான படங்களை கொடுத்து அசத்தினார் மீண்டும் தமிழ் சினிமாவில் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பாலிவுட் பக்கம் திசை திரும்பி உள்ளார் முதலில் ஷாருக்கானை வைத்து அங்கு ஜவான் என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும், பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்திலும் காமெடியனாக யோகி பாபு மற்றும் பல டாப் பாலிவுட் நட்சத்திர பட்டாளங்கள்  நடித்து வருகிறனர். அண்மையில் ஜவான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் கிண்டலும் கேலியும் செய்து வருகின்றனர் அட்லீ எதை செய்தாலும்  அது ஏதோ ஒரு படத்தின் காப்பி என கூறி அது சம்பந்தப்பட்டமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் ஷாருக்கான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் உடம்பு முழுக்க துணியை கட்டிக் கொண்டு இருப்பார் அதே போல பல்வேறு படத்தின் போஸ்டரை இந்த படத்தின் போஸ்டர் உடன் ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகின்றனர் இது எல்லாம் பெரிய விஷயமாக அட்லீ எடுத்துக் கொள்ளாமல் படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கி வருகிறார்.

ஜவான்  படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் படம் வெளியாகும் என படக்குழு அதிரடியாக கூறி உள்ளது. அதனால் படத்தின் வேலைகள் மும்முரமாக போய்க் கொண்டிருக்கின்றன இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா ROLEX பாத்திரத்தில் மிரட்டிவிட்டு போனாரோ அதேபோல  ஜவான் படத்திலும் ஒரு டாப் ஹீரோவை நடிக்க வைத்தால் படத்திற்கான வரவேற்பு அதிகரிக்கும் என அட்லீ திட்டம் போட்டுள்ளார் அதற்கான நடிகரை தேர்வு செய்து உள்ளார்.

அந்த பிரபலம் வேறுயாருமல்ல தளபதி விஜய் தான்  ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் தளபதி விஜய்யை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை சம்பவத்தால் விக்ரம் படத்தில் எப்படி சூர்யா அதேபோல் ஜவான்  படத்தில் ஷாருக்கானுடன்  விஜய் இணைந்து மிரட்டுவார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் இது நடக்குமா நடக்காதா என்று..

Leave a Comment