நீங்கள் போட்ட பிச்சை தான் பிச்சைக்காரன்.. எமோஷனலாக பேசிய விஜய் ஆண்டனி.! வைரலாகும் செய்தி

pichakkaran
pichakkaran

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் விஜய் ஆண்டனி. இவர் முதலில் இசையமைப்பாளராக திரை உலகில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு  படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார் முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில்   நடித்து வந்த இவர் நான் படத்தில் ஹீரோவாக நடித்தது மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தன இதனை தொடர்ந்து அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் காணப்பட்டாலும் இவர் சமீபகாலமாக நடித்த படங்கள் தோல்வியை தழுவின இதிலிருந்து மீண்டு வர  மழை பிடிக்காத மனிதன், கொலை..

பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் நடித்து வந்தார் இதில் முதலாவதாக அவரே இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 படம் கடந்த மே 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. பிச்சைக்காரன் படம் ஏற்கனவே வெளிவந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தை பார்க்க பலரும் அதிகம் ஆர்வம் காட்டினார் ஆனால் எதிர்பார்த்ததை விட பிச்சைக்காரன் 2 எமோஷனல், ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால்..

முதல் நாளே பாசிட்டிவான விமர்சனத்தை கொடுக்க தொடங்கியுள்ளனர் அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் முதல் நாளே அதிகரித்து காணப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் பிரமோஷன் விழாவில் பேசியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

டிஷ்யூம்   படத்தில் நீங்கள் கொடுத்த வாய்ப்பு இல்லை என்றால் இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது பிச்சைக்காரன் படம் நீங்கள் போட்ட பிச்சை எனக்கு இனி நான் எத்தனை படங்களில் நடித்தாலும் பிச்சைக்காரன் போல் ஒரு படம் கிடைக்காது. பிச்சைக்காரன் 2 படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் என காத்திருந்தேன். அதன் பிறகு வேறு வழி இல்லாமல் ஆரம்பித்தேன். முதல் 10 நாட்கள் படம் என் கைக்குள் வரவில்லை  பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கைக்குள் வந்தது.

இந்த படத்தின் மூலம் டைரக்டராக அடி எடுத்து வைத்துள்ளேன் பிச்சைக்காரன் படத்தின் காப்பி தான் இது எனக் கூறினார் மேலும் பேசியவர் ஒரு கட்டத்தில் நீங்கள் டைரக்டராக மாறுவீர்களா என பலரும் கேட்டனர் ஆனால் அப்பொழுது இல்லை என மறுத்திருக்கிறேன் ஆனால் சூழ்நிலை தற்போது என்னை இயக்குனராக மாற்றி விட்டது என கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் சசி..

விஜய் ஆண்டனி ஒரு சாமானிய மனிதன் பார்க்கும் பார்வையில் இருந்து படத்தை பார்ப்பார். பிச்சைக்காரன் படத்தில் ஒரு காட்சி சூப்பராக இருந்ததாக கூறினார் அவர் சொன்னது போலவே அந்த காட்சியை மக்கள் கைதட்டி கொண்டாடினார்கள் பிச்சைக்காரன் 2 படத்தை நான் தான் இயக்க வேண்டியதாக இருந்தது ஆனால் 100 கோடி வானவில் படத்தில் பிசியாக இருந்ததால் என்னால் படத்தை இயக்க முடியவில்லை எனக் கூறினார்  நிச்சயம் பிச்சைக்காரன் 2 படம் நன்றாக வந்திருக்கும் என விஜய் ஆண்டனி பார்த்து கூறினார்.