வலிமை பட டிரைலர் சாதனையை ஓவர்டேக் செய்ய முடியாமல் திணறிய பீஸ்ட்.. இதோ பாருங்கள்.

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முதன்முறையாக நெல்சன் உடன் கை கோர்த்தது தனது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ்,  ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன், யோகி பாபு,  ஷைன் டாம் சக்கோ மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.

பீஸ்ட் படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளிவருவதற்கு முன்பாக ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள படக்குழு தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டை கொடுத்த வண்ணமே இருக்கின்றன.

இதுவரை  பீஸ்ட் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதனைத் தொடர்ந்து அரபி குத்து, ஜாலியோ ஜிம்கானா அன்மையில் பீஸ்ட் டிரைலரும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த படத்தின் டிரைலர் இதுவரை பல்வேறு சாதனைகளை புரிந்து புரிந்துள்ளது மற்றும் பல அட்டாக் நடிகர்களின் டிரைலர் சாதனையை முறியடித்துள்ளது.

பீஸ்ட ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 19 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை படத்தின் டிரைலர் சாதனையை மட்டும் இதனால் முடிக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றிநடை கண்ட திரைப்படம் வலிமை.

வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த மூன்று நிமிடங்களிலேயே ஒரு லட்சம் லைக்குகளை அள்ளிய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விஜயின் பீஸ்ட் டிரெய்லர் ஒரு லட்சம் லைக்குகளை தொடவே ஏழு எட்டு நிமிஷம் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version