வீராட் கோலியின் மன அழுத்தத்தையும், ஆக்ரோஷத்தையும் கட்டுபடுத்த பழைய கேப்டனை அனுப்பி வைத்த பிசிசிஐ.? யார் அவர் தெரியுமா.?

0
virat-kohl
virat-kohl

இந்திய அணி இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு தற்போது ஐக்கிய அரபு அமிரகத்தில்  ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன அதற்காக வீரர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதை முடித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட இருக்கிறது இதில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்படுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அது முடிந்த பிறகு 20 ஓவர் போட்டி மற்றும் 50 ஓவர் போட்டிகளில் இருந்து விராட் கோலி கேப்டன்ஷிப் பொறுப்பை விட்டு விடுவார்.  சமீபகாலமாக வீராட்கோலி நல்ல முறையில் கேப்டன்ஷிப் செய்தாலும் பெரிய அளவில் கோப்பையை வென்றது இல்லை என ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது மேலும் அவரால் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை.

மேலும் சில வருடங்களாக சொல்லிக்கொள்ளும்படி சதம் அடிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது எழுந்துள்ளன இதுதான் என்றால் மேலும் அவர் மிகப் பெரிய மன அழுத்தத்தில் இருப்பதாகவும் சில ரிப்போர்ட்டுகள் கூறுகின்றன. மேலும் பயிற்சியின் போது அவருக்கு ஏதாவது அறிவுரை சொன்னால் என்னை குழப்பாதீர்கள் என்று எரிந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை இந்திய அணியில் இருக்கும் வீரர் யாரோ ஒருவர் பிசிசிஐக்கு சொல்வதாகவும் கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் விராட் கோலியின் ஆக்ரோஷத்தையும் மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்க பிசிசிஐ மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது.

dhoni
dhoni

தற்பொழுது விராட் கோஹ்லியை கட்டுப்படுத்தும் தன்மை மகேந்திர சிங் தோனி இடம் மட்டுமே இருப்பதாக கூறி அவரை நியமித்துள்ளனர். விராட் கோலி 20 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறுவதை கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.