பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்த பரீனாவுக்கு குழந்தை பிறந்தது.! அவரே வெளியிட்ட புகைப்படம்.

விஜய் டிவியில் நம்பர் 1 சீரியல் என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு இருப்பது பாரதிகண்ணம்மா தொடர். இந்தத் தொடரை  கனாகாணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி போன்ற மாபெரும் ஹிட் சீரியல்களை இயக்கி வந்த பிரவீன் பெண்ணெட் பாரதிகண்ணம்மா தொடரை எடுத்து வருகிறார்.

இந்த தொடரில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர்கள் ஆவார். மேலும் இந்த தொடரில் நடிக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியவர்களின் கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ஆகும். தற்பொழுது இவர்கள் இருவரும் இந்தத் தொடரில்  பிரிந்து வாழ்கின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் நடிகர் நடிகைகளின் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமோ அதுபோல வில்லி கதாபாத்திரமும் மக்கள் பலராலும் பேசப்பட்ட பிரபலமான வில்லியாகும். இந்த சீரியல் சிறப்பாக ஓடுவதற்கு முக்கிய காரணம் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவும் ஒருவர்.

இவர் சின்னத்திரையில் தொகுப்பாளி ஆக அறிமுகமாகி பின் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் ஒன்றில் அவரது கணவருடன் கலந்து கொண்டார். மேலும் இந்தத் தொடரில் சில வாரங்களிலேயே வெளியேறினார். பின்பு பாரதிகண்ணம்மா தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.

farina
farina

இவர் திருமணமாகி நான்கு வருடங்கள் கடந்து தற்போது கர்ப்பமாக இருந்தார். மேலும் இவர் கர்ப்ப காலங்களிளும் தொடர்ந்து பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வந்தார். இவர் கர்ப்ப காலத்தில் பலவிதமான போட்டோஷூட்களை நடத்தி இணையதளத்தை பற்றி எரிய வைத்தார். இந்த நிலையில் தற்போது நடிகை பரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Leave a Comment