என்னிடம் கேள்வி கேட்க வேண்டுமா..? அந்த தொகுப்பாளர் தான் வர வேண்டும் – அஜித் ஆசை.!

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் தனது சொந்த முயற்சியின் மூலம் முன்னேறி தற்போது தமிழ் திரை உலகமே கொண்டாடும் ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். அவரது ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்தப் படங்கள் சில வெற்றியடையும் சில படங்கள் தோல்வியடையும் இருந்தாலும் அஜித் ரசிகர்கள் ஒருபோதும் அவரை விட்டுக் கொடுத்ததில்லை. ஏனென்றால் அஜித் அந்த அளவிற்கு சினிமாவை தவிர்த்து குடும்ப வாழ்க்கையிலும் நல்ல மனிதர் மற்றும் உதவி என்று வரும் பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து இருக்கிறார். இந்த நிலையில் தமிழ் சினிமாவே கொண்டாடும்..

ஒரு சிறந்த நடிகராக வலம் வரும் அஜித் அண்மைக்காலமாக அதிகம் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகள் என எதிலும் கலந்து கொள்வதில்லை. இருந்தாலும் மற்ற பிரபலங்களிடம் அஜித் குறித்த கேள்விகள் பல கேட்கப்படும் அதன் மூலமும் அஜித் பற்றிய பல சுவாரசிய தகவல்கள் வெளி வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தில் வெற்றியை கொண்டாடும் வகையில் பிரபல சேனல் ஒன்று அஜித் இடம் பேட்டி எடுக்க ஆசைப்பட்டது. அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்தார் ஆனால் அஜித் கட்டளையிட்டாராம் அவர் சொன்னது நான் பேட்டி கொடுக்க வேண்டும் என்றால் விஜே விஜய் சாரதி பேட்டி எடுக்க வேண்டும் என கூறினாராம். விஜே விஜய் சாரதி சன் டிவியில் பிரபல ஆங்கராக  திகழ்ந்து வந்தார்.

இவர் எப்பேர்பட்ட  பிரபலமாக இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல் பேட்டி எடுக்க கூடியவர் இவர் அஜித்தை பேட்டி எடுத்தார் ஆனால் அந்த சமயம் அஜித் முன்னாடி விஜய் சாரதி கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தார் என்ற ஒரு சர்ச்சையும் கிளப்பி இருந்தது. இந்த நிலையில் விஜே விஜய் சாரதி ஒரு பேட்டியில் பேசிய போது அஜித்தே என்னை விரும்பி அழைத்தார் என பேசியிருந்தார்

Leave a Comment