நடிகர் அஜித்குமார் தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் முதலில் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்படி அங்கு அனைத்து விதமான காட்சிகளையும் எடுத்த பிறகு அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக புனே மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ஏகே 61 படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, இளம் நடிகர் வீரா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரி படமாக இருப்பதால் இதில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவருகிறது.
அதற்காக நடிகர் அஜித்குமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிலோ உடல் எடையை குறைத்து நடிப்பதாகவும் தகவல் வெளி வருகின்றன. இதனால் AK 61 படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை AK 61 படத்தின் படப்பிடிப்பு 55 முடிந்துள்ளதாக கூறப்படுகிறது இதில் அஜித் இரவு / பகல் பார்க்காமல் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
ஹைதராபாத்தில் ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்து அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு தற்போது புனே செல்ல இருக்கிறது. அந்த சூட்டிங்கில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கான காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஷூட்டிங் இந்த மாதம் அல்லது ஆகஸ்ட் மாதம் ஆரம்பத்திலேயே..
ம படப்பிடிப்பு பொருத்தமும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை நோக்கி நகரம் என கூறப்படுகிறது அப்படிப் பார்த்தால் படக்குழு சொன்னதுபோல தீபாவளிக்கு அஜித் படம் வருவதே கிட்டத்திட்ட உறுதியாகும்.இ தனால் ரசிகர்கள் தற்போது பெருமூச்சு போட்டுள்ளனர்.