ஹீரோயின் ரோல் இல்லாமலே தமிழ் சினிமா உலகை ஆட்டம் காணவைத்த “நடிகைகள்”.! இவுங்க தான் கெத்து..

சினிமா உலகில் ஒரு நடிகை வெற்றி பெற சிறந்த கதை களம் உள்ள படத்தையும் கொடுத்தால் மட்டும் போதாது எந்த ஒரு கேரக்டராக இருந்தாலும் அதில் நடித்து தனது திறமையை வெளி காட்டினால் மட்டுமே சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் மேலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்த டாப் நடிகைகள் பலரும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அந்த வகையில் விலைமாதுவான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நடிகைகள் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

  1. சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடித்து அசத்தியவர் நடிகை சங்கீதா. இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் நடித்து வருகிறார் ஹீரோயின் கதாபாத்திரத்தை விட வில்லிகள், விலைமாதுவாக நடிப்பது பெரிதும் கவர்ந்துள்ளது என பலரும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் அந்த வகையில் “தனம்” படத்தில் விலைமாதுவாக நடித்து அசத்தியிருப்பார்.

2. சினிமாவில் தற்போது அனுஷ்கா காணப்படவில்லை என்றாலும் சிம்பு, பரத் நடிப்பில் வெளியான “வானம்” என்ற திரைப்படத்தில் சரோஜா என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஏற்று நடித்து இருப்பார் இந்த படத்தில் விலைமாதுவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து போட்டார் இந்த திரைப்படம் அவருக்கு திரை உலகில் பெஸ்டானபடமாகப் பார்க்கப்படுகிறது.

3. 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரையிலும் நடித்து வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.  எந்த ஒரு ரோலாக இருந்தாலும் அதை திறம்பட நடித்து ரசிகர்களின் பாராட்டை பெறக்கூடியவர். அந்த வகையில் கமல் நடிப்பில் உருவான “பஞ்சதந்திரம்” என்ற திரைப்படத்தில் மாடர்ன் பொன்னாக வந்து நடித்து இருப்பார். இந்த திரைப்படத்தில் அவர் விலைமாதுவாக நடித்து பின்னி பெடலெடுத்து இருப்பார்.

4. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து பின் கதைக்காக வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் நடிகை சினேகா. அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான “புதுப்பேட்டை” என்ற திரைப்படத்தில் கிருஷ்ணவேணி என்ற கதாபாத்திரத்திற்காக விலைமாதுவாக நடித்து நல்ல பெயரை பெற்றார்.

5. கார்த்திக், ராதா ரவி நடிப்பில் வெளியான “நட்பு” என்னும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஸ்ரீபிரியா விலைமாதுவாக நடித்து அசத்தியிருப்பார் இந்தப் படத்தின் மூலம் பல்வேறு படத்தை கைப்பற்றினார் அந்த அளவிற்கு இந்த படம் அவருக்கு கைகொடுத்தது.

6. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த சரண்யா கமல் நடிப்பில் வெளியான “நாயகன்” படத்தில் விலைமாதுவாக நடித்து அசத்தினார்.